பிரதமர் உறுதிப்படுத்தினார்: எம்எச்370 இந்திய பெருங்கடலில் காணாமல் போய் விட்டது!

 

najib-pressகடந்த 17 நாள்களாக மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட தேடும் பணியைத் தொடர்ந்து, காணாமல் போன மாஸ் விமானம் இந்திய பெருங்கடலின் தென்பகுதியில்தான் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

இன்றிரவு மிக அவசரமாகக் கூட்டப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் நஜிப் ரசாக் இதனை அறிவித்தார். இச்செய்தியாளர் கூட்டம் கோலாலம்பூர் புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்றது.