கடாபி பிடிபட்ட பின்னர் இறந்தார்

லிபியாவின் முன்னாள் தலைவர் முவாம்மார் கடாபி இன்று நடந்த சண்டையில் ஏற்பட்ட காயத்தால் பிடிபட்ட பின்னர் இறந்து விட்டதாக லிபியாவின் இடைக்கால ஆட்சியாளர்கள் கூறினர்.

கடாபியின் சொந்த ஊரான சிர்தேயில் இது நடந்தது.

“அவர் (கடாபி) தலையிலும் கூட சுடப்பட்டார்”, என்று தேசிய மாற்ற மன்றத்தின் அதிகாரி அப்டெல் மஜிட் மலெக்டா ராய்ட்டரிடம் கூறினார்.

“அவரது கூட்டத்தினருக்கு எதிராக ஏராளமான துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன. அவர் இறந்தார்.”

வியாழக்கிழமை அதிகாலையில் ஒரு வண்டியில் தப்பி ஓட முயன்றபோது கடாபி பிடிக்கப்பட்டு இரு கால்களிலும் காயப்படுத்தப்பட்டார் என்று மலெக்டா ராய்ட்டரிடம் கூறினார். அவர் ஓர் மருத்துவ வண்டியில் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இச்செய்தி சுயேட்சையாக உறுதிப்படுத்தப்படவில்லை.