கர்பால்: ஹுடுட் அரசமைப்பின்கீழ் வராத ஒரு சட்டம்

karpal1993-இல், கிளந்தான்  சட்டமன்றம்  நிறைவேற்றிய “ஹுடுட்” சட்டம்  அரசமைப்புக்கு  உட்படாத  ஒரு  சட்டம்  என்பதால்  அதை  நடைமுறைப்படுத்த  முடியாது  என  டிஏபி  எம்பி கர்பால்  சிங்  நாடாளுமன்றத்துக்கு  நினைவுறுத்தினார்.

முதலில் கிளந்தான்  சட்டமன்றத்தில்  ஷியாரியா  சட்டத்தை   நிறைவேற்றியதே  சட்டப்படி  செல்லாது  என அந்த   மூத்த  வழக்குரைஞர் ஓர்  அறிக்கையில் கூறினார்.

“அந்தச்  சட்டத்தைக் கொண்டுவரும்  அதிகாரம்  மாநிலச்  சட்டமன்றத்துக்குக்  கிடையாது.  அரசமைப்பின்படி   உருவாக்கப்படாத  ஒரு  சட்டத்தைச்  செயல்படுத்த  நாடாளுமன்றத்தாலும்  முடியாது”,  என்றாரவர்.