மக்களவையில் அனல் கக்கும் உரைகளுக்குப் பேர் பெற்றவர் காலஞ்சென்ற கர்பால் சிங். கருத்துக்களும் ஆணித்தரமாக இருக்கும்; குரலும் கம்பீரமாக இருக்கும். இதனாலேயே ‘ஜெலுத்தோங் புலி’ என்றும் அவர் அழைக்கப்பட்டார்.
நாடாளுமன்றத்தில் அவர் கடைசியாக பேசிய பேச்சிலும் அந்தப் ‘புலியின் உருமலை’க் கேட்க முடிந்தது.
“இரண்டாவது தடவையாக அவையில் நீதிபதிகளின் நடத்தை பற்றிக் கேள்வி எழுப்பட்டுள்ளது. நானும் (முன்பு) முன்னாள் தலைமை நீதிபதி ஸாக்கி அஸ்மிக்கு எதிராக ஒரு தீர்மானம் கொண்டு வந்தேன். ஒன்றும் நடக்கவில்லை. ஏன்?
“எதற்காக இந்த அவை நீதிபதிகளுக்குப் பயப்படுகிறது? நீதிபதிகளின் நடத்தைப் பற்றி விவாதிக்க அஞ்சுவது ஏன்?”.
நாடாளுமன்ற பதிவேட்டில் ஏப்ரல் 10-இல் அவர் பேசியதாக பதிவாகியுள்ள இறுதி வார்த்தைகள்.
முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் நடத்தைமீது தீர்மானம் கொண்டு வந்த பிகேஆரின் கோம்பாக் எம்பி அஸ்மின் அலியையும் பாஸின் செப்பாங் எம்பி ஹனிபா மைடினையும் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்ற அவைத் தலைவர் முடிவெடுத்தபோது கர்பால் பேசிய பேச்சு அது.
நீதி மன்றத்தை வைத்தும் நீதிபதியை வைத்தும் அரசியல் நடத்தும் ஒரு கட்சி UMNO / BN தான், அப்படி இருக்கையில் எப்படி அவர்களுக்கு எதிராக அம்னோ குரல் கொடுக்கும்.மக்களவை சபாநாயகர் பண்டிகர் அமின் முளியாவும் அம்னோ உறுப்பினர் தானே .அவர் எப்படி நீதியை நிலைநாட்டுவார்.அம்னோவை எதிர்கட்சி யாக்குவதன் வழி நாட்டை காப்பாற்றுவோம், கர்பாளின் கனவை நிறைவேற்றுவோம் வாரீர் என்று மானம் உள்ள ஒவ்வொரு தமிழினத்தையும் அலைகிறேன் வாரீர்.தமிழர்கள் முதலில் மாறுவோம்.பின்னர் இந்த நாட்டை மாற்றுவோம் வாரீர்.தமிழன் நினைத்தால் முடியும் என்பதை நிருபித்து காட்டுவோம் வாரீர்.
தேசிய தலைவராக இருந்த சாமிவேலுவால் ம.இ.கா.கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டத்தோ கோவிந்தராஜ் அவர்களின் வழக்கில் வாதாடி வெற்றிப் பெற்று மீண்டும் கட்சியில் இணைய வாய்ப்பை ஏற்ப்படுத்தி கொடுத்தவர் அமரர் கர்ப்பால் சிங் அவர்கள்.
2008.ல்லிருந்து சிறிது சிறிதாக மாற்றங்கள் வந்துக்கொண்டுதான் இருக்கிறது…எதிகட்சியின் வலிமை ஓங்கிக்கொண்டிருக்கிறது… பாரிசானின் முழங்காலும் நடுங்கத்தொடங்கியுள்ளது. ஆட்சி மாற்றங்கள் வெகு தொலைவில் இல்லை என்பது உறுதி…..தொடரட்டும் மக்கள் உரிமைக்குரல்….!!!!!!