பொருள்கள் மற்றும் சேவைகள் வரி விதித்தல் இஸ்லாத்துக்கு முரணானது என்று பாஸ் கட்சியின் சமய அறிஞர்கள் பிரிவு கூறுகிறது.
பயனீட்டாளர்களின் வருமானத்தின் மீது வரி விதிக்காமல் அவர்கள் செய்யும் செலவு மீது வரி விதிப்பது இஸ்லாத்தின் வரி விதிப்பு கோட்பாட்டிற்கு எதிரானது என்று பாஸ் உலாமா தகவல் பிரிவின் தலைவர் முகமட் கைருடின் அமன் ரஸாலி கூறினார்.
“இதற்குக் காரணம் வரி (ஜிஎஸ்டி) செய்யப்படும் செலவிலிருந்து வசூலிக்கப்படுகிறது. இது வரி செலுத்துபவரின் நிதித் தகுதியை வேறுபடுத்தவில்லை.
“இதனால், குறைவான (நிதி) தகுதியுடையவர்களுக்கும் வரி விதிக்கப்படுகிறது”, என்று அவர் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
இஸ்லாத்தில் வரி விதித்தல் அமலாக்கம் செய்யப்படுவதற்கு கசிவுகள் மற்றும் வீண் செலவீனங்கள் ஆகியவை களையப்பட்டிருப்பதை நாடு முதலில் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
ஜிஎஸ்டி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இஸ்லாத்தில் “ஹராம்” என்று கூறப்படுவது குறித்து கருத்துரைத்த முகமட் கைருடின், ஆயுதப் போராட்டங்கள் வழி சட்டப்பூர்வமான அரசாங்கத்தைக் கவிழ்ப்பதிலிருந்து மட்டுமே முஸ்லிம்கள் தடுக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.
“தவறிழைத்த அரசர் கண்டிக்கப்படுவதோடு எதிர்க்கப்பட வேண்டும். இதயத்தாலும் நாவினாலும் எதிர்ப்பவர்கள் எந்தப் பாவத்தையும் இழைக்கவில்லை”, என்றாரவர்.
2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 இல் அமலாக்கம் காணும் ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு தெரிவிக்க மே 1 இல் சுமார் 50,000 மக்கள் டாத்தாரான் மெர்தேக்காவில் திரண்டிருந்தனர்.
சமயம், சமயம் பார்த்து அடிக்குது பார்!. அம்னோ கட்சி உலாமாக்கள் இதற்க்கு குர்ரானையும், ஹடித்தையும் கொண்டு பதில் சொல்லுகப்பா. இல்லையென்றால், உலகத்தின் நகைப்பு உங்கள் சமய அரசியல் ஆளாகிவிடும்.
போச்சுடா!. அரசனுக்கே வச்சிட்டாங்கப்பா ஆப்பு!. இது எங்கே போய் முடியோமோ தெரியவில்லை.
எங்க சைவ சமயத்தில் மனதளவில் நினைப்பதற்கும், நாவினால் சொல்லப்படுவதற்கும், நல்வினை தீவினைப் பயன் உண்டு. நல்லதை நினைப்பவர்க்கும், நல்லதை சொல்பவர்க்கும் நற்வினைப் பயனாகவும் அதற்க்கு எதிராக செய்பவருக்கு எதிரான வினைப் பயனும் உண்டு. நாம் தலை நிமிர்ந்து நிற்கின்றோம் ஐயா. யாரப்பா சொன்னது, தமிழன் சமயம் தழைக்காது என்று?. சைவம் தலை சிறந்த சமயம் என்பதற்கு வேறு சாட்சியம் வேண்டுமோ?.
அறிஞர் அவர்களே! இஸ்லாத்துக்கு முரணானது என்பது சரி. ஆனால் திருக்குரானில் நீங்கள் சொல்லுவது போல் ஏதும் சொல்லப்பட்டிருக்கிறதா?