அமைதிப் பேரணிச் சட்ட(பிஏஏ)த்தின்கீழ் ஸ்ரீசித்தியா சட்டமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அஹ்மட்மீது சாட்டப்பட்ட புதிய குற்றச்சாட்டுகள் இன்று தள்ளுபடி செய்யப்பட்டன.
அவற்றைத் தள்ளுபடி செய்த பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி யஸ்மின் அப்துல் ரசாக், இதே குற்றச்சாட்டுகளிலிருந்து நிக் நஸ்மி 11 நாள்களுக்குமுன் முறையீட்டு நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டிருப்பதாக கூறினார்.
எனவே, அரசுத்தரப்பு நிக் நஸ்மீது புதிதாக வழக்கு தொடுக்க முனைவதைவிட முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்திடம் மேல்முறையீடு செய்யலாம் என்றாரவர்.
‘கருப்பு 505’ பேரணி நடப்பது பற்றி 10-நாள்களுக்குமுன் தெரிவிக்கவில்லை என அமைதிப்பேரணிச் சட்டம் பகுதி 9(5)-இன்கீழ் நிக் நஸ்மிமீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
முதல் முறையாக ஒபமாவின் வருகைக்கு பிறகு நீதிமன்றம் தாம் சுயமாக இயங்குவது போல் பாவனை கட்டுகிறது எவ்வுளவு நாள் நிடிக்கும் என்று பாப்போம்.