மூன்றாண்டுகளாக ஆதாயம் காண முடியாமல் தத்தளிக்கும் மலேசிய விமான நிறுவனத்தை மீட்டெடுக்க மேலும் பணம்போடும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை எனச் சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ் கூறினார்.
போட்டிமிக்க சூழலைச் சமாளிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் எம்ஏஎஸ் விவகாரத்தில் என்ன செய்யலாம் என்பது அரசாங்கத்துக்கே புரியவில்லை என்று அவர் கூறியதாக கல்ஃப் நியுஸ் அறிவித்துள்ளது.
“மேலும் முதல்போடும் எண்ணம் நிச்சயம் கிடையாது”, என டூபாய் சுற்றுலா கண்காட்சியில் நஸ்ரி தெரிவித்ததாக அச்செய்தி கூறியது.
ஒரு இரண்டு வெள்ளி காசுக்கு டோனி பெர்னாண்டசுக்கு விற்று விடுங்கள். உங்களால் முடியாது என்றால் மற்றவர்களுக்கும் முடியாது என்று அர்த்தம் இல்லை.
MAS -சின் நற்பெயரைக் கெடுத்தால்தான் MALINDO பேர் போட முடியும்!. MAS தொழிலாளர்கள் இப்பவே வேற வேலையைப் பார்த்துக் கொண்டால் பிழைத்தீர்கள். இல்லாவிட்டால் VSS காத்துக் கொண்டிருக்கின்றது.
இப்பத்தான் தெரியுதா…கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா….!
நாட்டின் சின்னத்தை மாற்ற அம்னோ ஒருபொழுதும் ஆதரிக்காது!!!! மாஸ் தொடர்ந்து நிலைத்திருக்கும்….
மலிண்டோ நம் நாட்டின் வைர பெண்மணி, “சிக்கனத்தின்” சிகரம், நமது பிரதமரின் “மூளை” அக்காச்சி Rosmah வுடையது என்று ஊருக்குள்ளே ஒரு பேச்சு அடிபடுதே.. அப்போ மலிண்டோவும் நாட்டின் சின்னம் தானே..
பேசாமல் ‘MAS’ விமான நிறுவனத்தை மூடிவிடுங்கள். அதுதான் எங்களின் வரிப்பணத்திற்கு நல்லது.