நியாயமான கொள்கைகள்தாம் சீனச் சமூகத்தின் ஆதரவை மீண்டும் பெற உதவுமே தவிர அச்சுருத்தல் ஒருபோதும் உதவாது என்று சரவாக் எதிரணித் தலைவர் சோங் சியாங் ஜென் கூறினார்.
“முதலமைச்சர் (அடினான் சாதெம்) பிஎன்னுக்கு சீனச் சமூகத்தின் ஆதரவைப் பெற விரும்பினால், மாநில திட்டங்களில் சீனர்கள் ஓரங்கட்டப்படுவார்கள் என மிரட்டுவதன்வழி அதைச் சாதிக்க முடியாது.
“இப்படிப்பட்ட மிரட்டல்கள் அச்சமூகத்தில் வரவேற்பைப் பெற மாட்டா”. மாநிலச் சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது சோங் இவ்வாறு கூறினார்.
சீனர்கள் மேம்பாடு வேண்டுமென விரும்பினால் சரவாக் ஐக்கிய மக்கள் கட்சியையும் பிஎன்னையும் ஆதரிக்க வேண்டும் என சாதெம் கூறி இருந்ததற்கு எதிர்வினையாக கோத்தா செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் இவ்வாறு கூறினார்.
ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்..இது தான் இது…
மக்கள் முன்னேறத்திற்கு..பாடுபடுவதாக எந்த கட்சியும் செயல்படுவாதக
தெரியவில்லை…நான் தலையா! நீ தலையா! என்கிற போட்டிதான் நடக்குது..எங்க போய் முடியப்போகுதோ…