தெலோக் இந்தான் இடைத் தேர்தல் மே 31ஆம் நாள் என்றும் வேட்பாளர் நியமன நாள் மே 19 என்றும் தேர்தல் ஆணைய(இசி)த் தலைவர் அப்துல் அசீஸ் யூசுப் இன்று அறிவித்தார்.
இது, கடந்த மே மாத பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் ஆறாவது இடைத் தேர்தலாகும். டிஏபி-இன் தெலோக் இந்தான் எம்பி சியா லொங் பெங் (48) மே முதல் நாள் புற்று நோயால் காலமானதை அடுத்து இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
பாரிசானின் கடைந்தெடுத்த சொறி நாயைப் போன்று செயல்படுகிறது தேர்தல் பொறுப்பாண்மைக் குழு.(SPR) கர்ப்பால் சிங் 17-4-2014ல் இறந்தார். 25 நாட்களுக்குப் பின், அதாவது 12-5-2014ல் வேட்பு மனு தாக்கல் நாள். அதேபோன்று 1-5-2014ல் தெலுக் இந்தான் MP காலமானார். 25 நாட்களுக்குப் பின், அதாவது 26-5-2014ல் வேட்பு மனு நாளை அறிவித்திருக்கலாம். ஆனால், 19-5-2014ல் வேட்பு மனு நாளை நிர்ணயித்ததர்கான காரணாம், 25-5-2014ல் புக்கிட் குளுகோரின் வாக்குப் பதிவு நாள் என்பதால்., எதிக்கட்சியினருக்கு குழப்பம் விளைவிக்கவே இந்த நரித்தந்திரம்.