பிகேஆரில் மலாய்த் தலைவர்களை ஒழித்துக்கட்ட முயற்சி நடைபெறுகிறதா என பினாங்கு அம்னோ தொடர்புக்குழுத் தலைவர் சைனல் அபிடின் ஒஸ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிகேஆர் கட்சித் தேர்தல்களில் சில தொகுதிகளில் மலாய்க்காரர்-அல்லாதவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட மலாய்த் தலைவர்கள் தோற்றுப் போனதைத் தொடர்ந்து அவர் இக்கேள்வியை எழுப்பினார்.
குறிப்பாக, தஞ்சோங், பாயான் பாரு ஆகிய தொகுதிகளில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் மாலிக் காசிமும், துணை முதலமைச்சர் I ரஷிட் ஹஸ்னோனும் முறையே முன்னாள் பினாங்கு முனிசிபல் கவுன்சிலர் இங் செக் சியாங்கிடமும் பாயான் எம்பி சிம் ட்ஸே ட்ஸினிடமும் தோற்றதை அவர் சுட்டிக்காட்டினார்.
அப்ப கட்சித் தேர்தல நடத்தாதீர்கள். காலா காலத்துக்கும் ஒருவரே தலைவராக இருக்கலாம்.
பி கே ஆர் தேர்தல் முடிவுக்கு நீரேனப்பா குரைக்கிறீர்??? கட்சி உறுப்பினர்தானே தேர்ந்தெடுக்கின்றனர்.. உமக்கு எங்கேனும் வலிக்கிறதா / எரிகிறதா???
தேனீ கருத்துக்கு நான் ஆதரிக்கிறேன் கிளை தேர்தல்,தொகிதி தேர்தல்,மாநில தேர்தல் மற்றும் தேசிய தேர்தல் நடத்த வேண்டாம் பணமும் மிட்சம் அவர் ஒருவரே காலாகாலத்துக்கு தலைவரா இருக்கட்டும்.
பி கே ஆர் தலைவர்கள் மீது பாசம் அதிகமாகிறதே? குட்டையை குழப்பி மீன் பிடிக்க சரியான தருணம் .
Penang UMNO all position occupied by INDIAN Muslim. where are the Malay go? why never give oppurtinity to Malay?