55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிப்பெற்ற பேரா மாநிலத்தில் உள்ள தெலோக் இந்தான் (P076) தொகுதி மூவினத்தை சார்ந்த தொகுதி என்பதாலும், கடந்த 2008 ஆம் ஆண்டு 12 வது பொதுத் தேர்தலில் முதன் முதலாக களம் கண்ட சமூகவியலாளரும், தமிழ் அறவாரியத்தின் முன்னால் தலைவருமாகிய திரு.மனோகரன் த/பெ மாரிமுத்து அன்று, தற்போதிய கெராக்கான் கட்சியின் தலைவராக இருப்பவரான மா சீவ் கோங் என்ற கெராக்கான் கட்சி வேட்பாளரை 1470 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து ஒரு புதிய வரலாறு படைத்தும், ஜனநாயக செயல் கட்சியின் (ஜசெக) குரல் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்க செய்தார் என்பது யாவரும் அறிந்த செய்திதான்,
12 வது பொது தேர்தலுக்குப் பிறகு 5 ஆண்டுகள் தெலோக் இந்தான் நாடாளுமன்ற தொகுதியை அலகறிந்த ஒரு வழக்கறிஞரான ம.மனோகரன் தனக்கே உரிய சமூக கடப்பாட்டு தன்மையை வெளிப்படுத்தி நாட்டில் ஜனநாயகம் தழைக்க அயராத உழைத்த தமிழ் ஆர்வாளர்களில் இவரும் ஒருவர் என்றால் அது மிகையாகாது, அடிப்படையிலேயே அரசு சார்பற்ற இயக்கத்தின் வழியும், தன் சார்ந்துள்ள ஜசெக கட்சியின் வழியாகவும் தன்னுடைய தொகுதி மக்களுக்கு மட்டுமல்லாமல், நாடு தழுவிய நிலையில் உள்ள நம் இந்திய சமுதாயத்திற்கு காலம் அறிந்து உதவிகள் மட்டுமல்லாமல், சமூக அரசியல் சேவைகளை செய்ததன் வழி நாடு முழுவதும் நன்கு அறிமுகமான தலைவரிகளின் திரு.மா.மனோகரனும் ஒருவர் என்பதில் யாருக்கும் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது என்றே கூறலாம், ஆற்றலும், அறிவும், செயல் திறனும், சமூகவுணர்வும், இணமானம், மொழிமானம் உள்ள ஒரு வழக்கறிஞரான மனோகரன் நாட்டின் இந்திய சமுதாயத்தின் மத்தியிலும், ஜசெக மத்தியிலும் நிலைப்பெற்ற தலைவனாய் நிமிர்ந்து நின்றதன் அடிப்படையில் கடந்த 2013 ஆம் ஆண்டு 13 வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் கோட்டையான கேமரம் மலை தொகுதியை அசைத்துப் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஜசெக தலைமை திரு.மனோகரனை நம்பிக்கையோடு பகாங் மாநிலத்தில் உள்ள கேமரன் மலைக்கு அனுப்பிவைத்தது, நம்பிக்கையோடு அனுப்பிவைக்கப்பட்ட மனோகரன் எந்தக் கலத்திலும் யாராலும் அசைத்துக்கூட பார்க்கமுடியத கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுயில் தேசிய முன்னணி ஆட்டம் காணும் அளவிற்கு அசைத்துக் காட்டி, பண பலமும், அதிகார பலமும் கொண்ட தேசிய முன்னணி வேட்பாளரை அதுவும் தேசிய முன்னணியின் கூட்டுக் கட்சி தலைவரான மஇகாவின் தேசியத் தலைவர் மதிப்புக்குறிய மாண்புமிகு டத்தோஶ்ரீ ஜி.பழனிவேலுவிடம் வெறும் 462 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்து, தேசிய முன்னணிக்கு ஒரு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார் என்பது வரளாறு.
அந்த வகையில் ஜசெகவின் உச்ச மன்றம் எடுத்த முடிவை ஏற்று, மத்திய அரசாங்கத்தின் பலம் பொறுந்திய ஒரு கட்சியின் தேசியத் தலைவரை எதிர்த்து தான் சார்ந்தக் கட்சியின் கௌரவத்தையும், கட்சியின் உள்ள தனது ஈடுபாட்டையும், அசைக்கமுடியாத விசுவாசத்தையும் நிலைநிறுத்தும் பொருட்டு கட்சியின் வேண்டுகோளை தாழ்மையாக ஏற்றுக்கொண்டு, தனக்கு வெற்றி வாய்ப்புள்ள தெலோக் இந்தான் தொகுதியை விட்டுக்கொடுத்து, ஜசெகவின் விருப்பத்தை நிரைவேற்றிய சமுகவியளாளர் திரு.மனோகரனுக்கு மீண்டும் திலோக் இந்தான் தொகுதி வழங்கப்பட வேண்டும் என்பது மக்களின் விருப்பம்.
அன்மையில் திலோக் இந்தான் தொகுதி உறுப்பினர் லியோங் பெங் நோயின் காரணமாக காலமானதல் அத்தொகுதி இன்று காலியாக உள்ள சூழ்நிலையில் கூடிய விரைவில் தெலோக் இந்தான் (P076) தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் மீண்டும் தோழர் மனோகரனுக்கே ஜசெக வாய்ப்பளிக்க வேண்டும் என்று பலரது கருத்தாக உள்ளது என்பதை கட்சி தலைமை அறிந்து அறாய்ந்து கட்சியின் கட்டளையை மதித்து கேமரன் மலை சென்று வெற்றி வாய்ப்பை இழந்த மனோகரனின் குரல் மீண்டும் மலேசிய மக்களுக்காகவும், இந்திய சமுதாயத்திற்காகவும் ஒலிக்க, இன்று நாட்டின் மக்கள் நலனை முன்னிருத்தி பினாங்கு மாநிலத்தை ஆட்சி செய்து சாதனை படைத்து வரும் ஜசெகவும் அதன் உயர்மட்ட தலைவர்களும் திலோக் இந்தானில் மீண்டும் மனோகரன் மாரிமுத்துவை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று பொது மக்கள், அரசு சார்பற்ற இயக்கங்கள், கட்சித் தலைவர்கள், ஜசெக உறுப்பினர்கள் சார்பாக மனோகரனுக்கு ஆதரவு தெரிவித்து அவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று மக்களின் விருப்பத்தை முன்வைக்கிறேன்.
அன்பன்
செ.குணாளன். 013-4853 128
yb மனோகரனுக்கு வாய்ப்பு கொடுக்கலாமே !
இந்தியர் ஒருவர் நின்றால் வெற்றி வாய்ப்பு பிரகாசம். 20 % இந்தியர் வாக்களர்களை கொண்ட தொகுதி.ஐ பி எப் . மக்கள் சக்தி .போன்ற சூடு சுரணை தன் மானம் இல்லாத கட்சிகளினால் இந்தியர் வாக்கு பாரிசானுக்கு செல்ல வாய்ப்புண்டு .37% மலாய் வாக்கும் அம்னோ இனவாத போக்கல் பாரிசானுக்கு பெருவாரியாக செல்ல வாய்ப்புண்டு ஆகவே ஓர் இந்தியர் வேட்பாளராக நின்றால் பெருவாரியான இந்தியர் ,சீனர் வாகுகளை பெற்று வெற்றி பெறமுடியும்.
YB மனோகரனுக்கு வாய்ப்பளிப்பதில் எந்த தவறுமில்லை…. தகுதியுடைய சிறந்த வேட்பாளரே!!
நல்ல ஆலோசனை ,இதை நிறைவேற்ற கர்பால் சிங் dap தலைவர் புதிய உலகத்துக்கு சென்றுவிட்டரே ?
மலேசியா ஜனநாயக செயல் கட்சி சீன இனவாத கட்சி என்பதால் என்னதான் கத்தி கதறினாலும் இந்தியர் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்காது.இந்தியரை வைத்து இந்தியரை கொள்ளும் வித்தையை நன்கு அறிந்த கட்சி இது.நாமெல்லாம் ஓடும் பிள்ளைதான்
நல்ல தேர்வு. இதை ஜசெக பரிசீலனை செய்ய வேண்டும்!!!!!!!
அங்கேயும் கெஞ்சல் தானா,,,,என்னாப்பா நம்ம நிலைமை இப்படியா , ஆன்னா ஒன்னு பாரிசானிலாவது MIC நம் கட்டுப்பாட்டில் உள்ளது , வருடாவருடம் மாநாடு நடத்தி நம் பிரச்சனைகளை உரக்க சொல்லுகிறோம் , கட்சி நூறு சதவீதம் நம் கட்டுப்பாட்டில் உள்ளது , ஆனால் DAP இல் அப்படியா அங்கே நம் குரலுக்கு மதிப்பே இல்லை , நம் இந்தியப்பெயர் தாங்கி தலைவர்கள் நம் பத்திரிகையில் கத்துவதோடு சரி , அங்கே அவர்களின் ஜம்பம் பலிக்காது , சீனர்களின் ஆதிக்கம் தான் , எல்லாம் அரசியல் விளையாட்டு , அரசியல் லாபம் மட்டுமே ஒரே குறிக்கோள் , ………
தெலுக் இந்தானில் ஒழுங்காக வேலை செய்திருந்தால், இங்கிருந்த மனோகரனை நாங்கள் ஏன் கேமரன் மலை காட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும்?