பெர்காசா: பாரங்களில் இனம் பற்றி வினவும் பகுதி நீக்கப்பட்டால் நடவடிக்கை எடுப்போம்

ib aliஅரசாங்கப்  பாரங்களில் “இனம்” பற்றி  வினவும் பகுதி  நீக்கப்பட்டால்  சட்ட  நடவடிக்கை  எடுக்கப்போவதாக  பெர்காசா  எச்சரித்துள்ளது.

சில  அரசாங்கப்  பாரங்களில்  கூடுதல்  பயனில்லை  என்று  தெரியுமிடங்களில் “இனம்” பற்றி  வினவும்  பத்தியை  நீக்க  அமைச்சரவை  முடிவு  செய்திருப்பதாக  நேற்று  பிரதமர்துறை  அமைச்சர்  ஜோசப்  எந்துலு  கூறி  இருந்தார்.

அது  பற்றிக்  கருத்துரைத்த  பெர்காசா  தலைவர்  இப்ராகிம்  அலி,  “இதற்கு  எதிராக  வழக்கு  தொடுத்து  கடைசிவரை  போராடுமோம்”,  என்றார். அது அரசமைப்புக்கு  எதிரானது  என்றுரைத்த  அவர்  அது பற்றி  விவரிக்கவில்லை.

இதனிடையே,  இன்று  காலை  செய்தியாளர்களிடம்  பேசிய  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  அரசாங்கக்  கொள்கையில்  மாற்றமில்லை  என்றார்.

“அமைச்சரவை  விவாதித்தது.  நடப்பில்  உள்ள  கொள்கையையும்  நடைமுறையையும்  தொடர்ந்து  வைத்திருப்பதென  முடிவு  செய்யப்பட்டது”,  என்றார்.