ஸாலேஹா, உங்கள் மாணவர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் செவி சாயுங்கள்

“அப்துல் அஜிஸ் சொல்லிய கருத்து ‘பல்கலைக்கழக நலன்களுக்கு எதிரானது. அது பல்கலைக் கழகத்தின் தோற்றத்துக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது’ என அது கூறுவது இடைநீக்கத்துக்குக் கொடுக்கப்பட்ட பொருத்தமில்லாத வாதமாகும்.”

முனைவர் இடைநீக்கம் மீது யூஐஏ-யில் ஆர்ப்பாட்டம் நிகழ்கிறது

லவர் பாய்: அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழக (யூஐஏ) தலைவர் ஸாலேஹா கமாருதினை பழி சொல்லக் கூடாது. காரணம் அவர் மேல் மட்டத்திலிருந்து உத்தரவுகளைப் பெறுகிறார். தாம் “கீழ்ப்படியும் மனைவி” என அவர் எண்ணுகிறார்.

யூஐஏ மாணவர்கள் அம்னோ அதிகாரிகளுக்கு எதிராக இவ்வளவு துணிச்சலாக எழுந்திருப்பது எனக்கு வியப்பை அளித்தது.

உங்கள் துணிச்சலுக்கு என் பாராட்டுக்கள். யூஐஏ மாணவர் வலிமை வாழ்க!

அமைதி விரும்பி: பேராசிரியர் அப்துல் அஜிஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு பல்கலைக்கழகத்துக்கு உரிமை இருப்பதாக சிலர் கூறுகின்றனர். நான் அந்த விஷயம் பற்றி வாதாட விரும்பவில்லை. பேராசிரியருக்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆதாரம் உள்ளதா இல்லையா என்பதே என் கேள்வியாகும்.

கல்வியாளர்கள் கருத்துக்கள் சொல்லக் கூடாது என விதி முறைகள் ஏதும் உள்ளனவா? எனக்குத் தெரிந்த வரை ஒன்றுமில்லை. அப்படி ஒரு விதி இருப்பதாக வைத்துக் கொண்டால் கடந்த காலத்தில் எத்தனையோ கல்வியாளர்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். ஏன் இப்போது மட்டும் நடவடிக்கை  எடுக்கப்படுகிறது?

அப்படி ஏதும் உத்தரவு இருந்தால் அது நமது பல்கலைக்கழகங்களுடைய தரம் தாழ்ந்திருப்பதற்கான காரணம் புரிகிறது.

ஜெஸ்ஸி: சட்டத்துறையைச் சார்ந்த கல்வியாளர் என்னும் முறையில் ஸாலேஹா கமாருதினுக்கு நன்கு  தெரிந்திருக்க வேண்டும். அத்தகைய அற்பத்தனமான நடவடிக்கையை எடுத்ததின் மூலம் பல்கலைக்கழகத்திற்குக் களங்கத்தை ஏற்படுத்திய ஸாலேஹாவுக்குத்தான் காரணம் கோரும் கடிதம் கொடுக்கப்பட வேண்டும்.

கல்வித் துறையின் உண்மையான பணிகளை அறியாத அடிபணியும் இன்னொரு அரசாங்க நியமனதாரரா அவர்?

இது அரசியல் விவகாரம் அல்ல. அது சாதாரண கல்வித்துறை கௌரவம், நேர்மை சம்பந்தப்பட்டதாகும். நீங்கள் கல்வியாளரா அல்லது துதி பாடும் சேவகரா? அவர் துதி பாடும் சேவகர் என நான் நினைக்கிறேன். அவரது முடிவை எதிர்க்கும் மாணவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

ஒரே எம்: “நாங்கள் இப்போது அந்த விவகாரத்தில் உண்மை நிலையை அறிந்து கொள்ளும் பணியில்  ஈடுபட்டுள்ளோம்…”

ஸாலேஹா எந்த உண்மையை? பொறுப்புள்ள சிந்திக்கும் குடிமகன் என்னும் முறையில் நான் கூறுவது இதுதான்: சிலாங்கூர் சுல்தான் பிறப்பித்த கட்டளை மீது பேராசிரியர், சுல்தானுடைய நடவடிக்கை  வழக்கத்திற்கு மாறானது, பொருத்தமற்றது எனக் கருத்துரைத்தார். அவ்வளவுதான்.

இப்போது உண்மை நிலை உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. நீங்கள் அவர் மீது என்ன குற்றச்சாட்டை சுமத்த முடியும்?

மஞ்சித் பாட்டியா: அந்தத் துணிச்சலான மாணவர்களுக்கு ஒவ்வொரு மலேசியனும் தோள் கொடுக்க  வேண்டும். அந்தத் தவறு சரி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.

அந்தப் பல்கலைக்கழகத்தின் திறமையற்ற வாய் பேசாத நிர்வாகிகள் குறிப்பாக தலைவர் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என அவர்கள் போராட வேண்டும். அரசியல் கைப்பாவைகள், பல்கலைக்கழகத்தை நடத்துவதற்குத் தகுதியற்றவர்கள்.

ஜீன் பியாரே: சீர்திருத்த போராட்டத்துக்குப் பின்னர் ஒரு மனிதருக்காக இவ்வளவு பேர் ஆர்ப்பாட்டம்  செய்ததில்லை.