நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி தன் மகளைத் திருப்பி அனுப்ப மறுக்கும் மதமாறிய முன்னாள் கணவரைக் கைது செய்ய வேண்டும் என்று இந்திரா காந்தி விரும்புகிறார்.
மகளைத் திருப்பிக் கொடுக்க கே.பத்மநாதன் @ முகம்மட் ரித்துவான் அப்துல்லாவுக்கு வழங்கப்பட்டிருந்த கெடு இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
இதுவரை அவர் திருப்பி அனுப்பவில்லை. மகளைத் திருப்பி அனுப்பும் “நிலையில் இல்லை” என்று அவர் தெரிவித்திருப்பதாக இந்திரா காந்தியின் வழக்குரைஞர் எம்.குலசேகரன் கூறினார்.
எனவே, நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றத்துக்காக பத்மநாதனைக் கைது செய்யக் கோரி இந்திரா போலீஸில் புகார் செய்வார் என குலசேகரன் குறிப்பிட்டார்.
மதம் மனிதனை பிரிக்கிறது மனித நேயம் ஒன்று தான்
மனிதனை இணைக்கிறது ,அதனால் நைனா உனக்கு எது
வேண்டும் கூறு நைனா கூறு .
அந்த தருதலை கூடியா சிகிரத்தில் இந்த உலகை விட்டே போய்விடுவான்
கல்லானாலும் கணவன்,புல்லானாலும் புருஷன் என்ற சுலோகம்
மறைந்து இப்போது கணவனை கைது செய்யுங்கள் என்ற கண்ணகிக்கு
பாராட்டுக்கள்.
இதுக்குத்தான் பெரியவங்க சொன்னாங்க..!!ஏருனா எருதுக்கு கோபம்..
இறங்கினா நொன்டிக்கு கோபம் என்கிறது..ஏன்யா!! நான் தெரியாமத்தான் கேட்கிறேன்…இந்து மதத்தல என்ன? குறையை கண்டீங்க..திறுக்குறலை எடுத்துகுங்க…அதுல சொல்லாத வாழ்கை நெறியா..!!போங்கய்யா…
நீதி மன்ற உத்தரவை மீருகிறவர்களுக்கு கைது வறண்டு இயல்பாகவே வந்து விடுகிறது..? அப்படி இருக்க இங்கு மட்டும் இழுப்பரியா இருக்குது இதுதான் சட்டம்..?
இல்லம்மா! நீங்க சொல்றதை எல்லாம் காவல் துறை கேட்கும் “நிலையில் இல்லை”. பத்மநாதனைப் போல அவர்களும் எங்கோ “மல்லாந்து” கிடக்கிறார்கள்!
ஜம்ரி வல்கி, இந்து மதத்திற்கும்,திருக்குறளுக்கும் முடிச்சி போட
வேண்டாம்.