செபராங் பிறை தெங்கா போலீஸ் (எஸ்பிடி), சனிக்கிழமை புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனையில் இறந்த எஸ். நாயுடு ஆகின் ராஜ் (வலம்) போலீசார் அடித்ததால் செத்தார் என்று கூறப்படுவதை மறுத்தது.
அந்த 26-வயது லாரி ஓட்டுனர், கடந்த ஆறு மாதங்களில் பினாங்கு போலீஸ் லாக்-அப்களில் இறந்துபோன ஏழாவது நபராவார்.
“அவரை அடிக்கவில்லை. அவரை அடிப்பதற்குக் காரணம் ஏதுமில்லை”, என எஸ்பிடி போலீஸ் தலைவர் எஸ்யுபிபி பஹாரோம் அபு கூறினார்.
“திருடுபோன பொருள் கிடைக்கவில்லை என்றால்தான் (அவற்றைக் கண்டுபிடிக்க) பலவந்தப்படுத்துவோம். ஆனால், இவ்விவகாரத்தில் (அவரைப் பிடித்தபோதே) பொருள்களும் கிடைத்துவிட்டன”, என்றாரவர்.
நேற்று டாக்டர் பூபேந்தர் சிங் மேற்கொண்ட சவப் பரிசோதனையில், ஆகின் ராஜ் வலிப்புநோயால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூளைக்குப் போதுமான உயிர்க்காற்று கிடைக்காததால் இறந்தார் என்பது தெரிய வந்திருப்பதாகக் கூறினார்.
ஐயோ வங்காளிய நம்பாதீங்கோ !
லாக் ஆப் சக கைதிகளை கேளுங்கள்..!!
இரண்டாவது பரிசோதனை செயுங்கள்
அடித்து மயக்கம் அடைத்தாலும் காற்று
சுவாசிக்க முடியாது. தாங்க முடியாத அடி என்றால்
வாயில் நுரை வரும்.உடல் அடியை பார்காவும்.
கூறப்பட்ட குறை, தடையத்துடனோ அல்லது சவ பரிசோதனை அறிக்கையுடனோ நிரூபிக்கப்பட்டால் நன்றாக இருக்கும். இல்லையேல், கடைமையை செய்த போலிஸ் மீது வீண் பலி சுமத்துவதுபோல் ஆகிவிடும்.
திருட பட்ட பொருள் கிடைக்க வில்லை என்றால் பலவந்த படுத்துவோம் என்றால் என்ன அருத்தம் .என்னமாதிரி பலவந்தம் அது ?
கையிற்றை கட்டி தலைகிழாக தொங்க விட்டு மிதி மிதி என்று மிதிப்பதா ? போலிசின் பலவந்தம் என்ன என்பதை நான் நேரடியாக சந்தித்த ஒரு சம்பத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரத்தில் அமைந்திருக்கும் அந்த காவல் நிலையத்தில் எனது சக மலாய் நண்பரை ஜாமீன் எடுபதற்காக காத்திருந்தே வேலையில் ,நான் கண்ட சம்பவம் என்னை அதிர்ச்சியும் அதை விட ஆத்திரத்தையும் உண்டாகியது .ஒரு மலாய் இலஞ்சனை தலைகிழாக தொங்க விட்டு அங்கு சுற்றி இருந்த போலிஸ் உடை அணிந்த அதிகாரிகள் அவரை மாறி மாறி உதைப்பதை கண்டு ஒருகணம் அழுந்து விட்டேன் .இது கட்டு கதை இல்லை நடந்த உண்மை .அந்த இலஞ்சனின் முகத்தில் வழிந்த ரத்தம் இன்னும் என் கண்களில் நிழலாடுகிறது .யார் இந்த போலிஸ் அதிகாரிகளுக்கு இப்படி விசாரணை செய்ய அதிகாரம் கொடுத்தது .
அம்னோ குண்டர்களை நம்ப முடியாது—இன்னொரு பிரேத பரிசோதனை தேவை.
மலேசியா தமிழர்கள் நிமிரும்வரை இத நிகழ்வுகள் தொடரும் ..தேடுங்கள் ஒரு உண்மை தலைவனை ….
இதே ஹிந்ட்ரப் உதயகுமார் இருந்திருந்த இப்படி ஒன்றுமே தெரியாம போயிருக்குமா ? இந்நேரம் எல்ல தமிழ் இனத்தவருக்கும் செய்தி போயிருக்கும். ஆனா நாம தான், உதய குமார் அவர்களை மறந்து ரொம்ப நாலசுங்கேலே !! இன்னும் எத்தனை ஹிந்ட்ரப் தலைமை வந்தாலும் யாராலையும் மாத்த முடியாது. நல்லவர்களை இந்தியர்கள் மறந்து போனது !
இப்ப கெமர சி சி டி வி இல்லை என்கிறான் என்ன கதை இது