அரசாங்கம் கேஎல்ஐஏ2 பேரங்காடியில் செலுத்தும் கவனத்தை விமான முனையத்தில் செலுத்துவதில்லை

kliaபிஎன்  நாடாளுமன்ற  உறுப்பினர்  ஒருவர்,  கேஎல்ஐஏ2  விமான  நிலையத்தில்  பல  பிரச்னைகள்  நிலவுவதைச்  சுட்டிக்காட்டினார்.  அரசாங்கம்  “பொருள் விற்பனை  மையத்தில்”  காண்பிக்கும்  அக்கறையை விமான  முனையத்தின்  வசதிகளை  மேம்படுத்துவதில்  காண்பிப்பதில்லை.

“விற்பனை  மையத்தைப்  பற்றி  மட்டுமே  கவலைப்படுவதாக  தெரிகிறது. விமான  முனையம்  என்னாவது? மக்கள்  பொருள்  வாங்கிச்  செல்வதற்கா  அங்கு  வருகிறார்கள்?”, என பிந்துலு  எம்பி தியோங்  கிங் சிங்  வினவினார்.   பொருள் விலைகளும்  கேஎல்ஐஏ-யைவிட  கேஎல்ஐஏ2-இல்  உயர்வாக  உள்ளன  என்றும்  அவர்   முறையிட்டார்.