நள்ளிரவுக்குப் பின்னர் பந்திங்குக்கு அப்பால், சுங்கை ஆயர் ஹித்தாமிலிருந்து இரண்டு மைல் தொலைவில் படகு ஒன்று கவிழ்ந்ததில் அதில் பயணித்தவர்களில் சுமார் 11 பேரைக் காணவில்லை.
படகு கவிழ்ந்த செய்தி கிடைத்த அரை மணி நேரத்தில் பந்திங் தீயணைப்பு, மீட்பு அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்தைச் சென்றடைந்தனர்.
97 பேர் படகில் பயணம் செய்ததாகவும் அவர்களில் 86பேர் மீட்கப்பட்டிருப்பதாகவும் உத்துசான் மலேசியா எஸ்எம்எஸ் செய்தி கூறியது. மற்றவர்களைத் தேடும்பணி தொடர்கிறது.
படகில் பயணம் செய்தவர்கள் இந்தோனேசியர்கள் என்று நம்பப்படுவதாக ராய்ட்டர்ஸ் கூறியது.