அண்மைய நாள்களில் முரண்பாடாக பேசிவரும் பிரதமர்துறை அமைச்சர் ஜமில் கீர் பஹாரோமை நாடாளுமன்ற உரிமைகள், சலுகைகள் குழுவுக்கு விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என எதிரணி எம்பிகள் இருவர் பரிந்துரைத்துள்ளனர்.
ஒஸ்கார் லிங் (டிஏபி- சிபு), மலேசியா சமயச் சார்பற்ற நாடு என்று ஜமில் கீர் கூறியதற்காக அவரை உரிமைகள் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றார். இங் வை ஏய்க் (டிஏபி- தஞ்சோங்) மலேசியாவில் ஹுடுட் பற்றிய ஜமில் கீரின் கருத்துரைக்காக அவரை அக்குழுவின் விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்றார்.
ஆனால், அவைத் தலைவர் பண்டிகார் அலி மூலியா, அந்த விவகாரம் “இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை”, என்று தெரிவித்தார்.
இறைவ இவனல் எங்களின் நாட்டின் மக்களின் ஓட்ருமைகே ஆபத்து .இந்த மடையனுக்கு நல்ல புத்தியை கொடு அல்லது இந்த பூமியில் இருந்து அவனுக்கு நிரந்தரமான விடுதலை கொடுத்து விடு .