கூலிமில் அனைத்துலக விமான நிலையம் கட்டும் கெடா அரசின் உத்தேசம் குறித்து பினாங்கு பிஎன்னின் உண்மையான நிலையை அறிந்துகொள்ள விரும்புகிறார் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்.
மாநில அம்னோ தலைவர் சைனல் அபிடின் ஒஸ்மான் பினாங்கு அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்கிறார்.
“ஆனால், மறுபுறம் மாநில பிஎன் தலைவர் டெங் சாங் இயோ, கூலிம் விமான நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்”, என லிம் குறிப்பிட்டார்.
“கூலிமில் புதிய விமான நிலையம் கட்டும் கெடாவின் திட்டத்தை ஆதரிக்கிறதா, எதிர்க்கிறதா என்பதை பினாங்கு பிஎன் ஒன்றுகூடி முடிவு செய்ய வேண்டும்”, என்றாரவர்.
பினாங்கு அரசாங்கத்திடம் தான் கோளாறு. புதிய அனைத்துலக விமான நிலையம் அம்மாநில வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.