மலேசிய வழக்குரைஞர் மன்றம் பைபிள் விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற சிலாங்கூர் சுல்தானின் ஆலோசனை குறித்து அதன் கருத்தைத் தெரிவித்திருந்த போதிலும், சிலாங்கூர் அரசாங்கம் சுல்தானின் ஆலோசனையைப் பின்பற்றும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் கூறினார்.
சிலாங்கூர் மாநில சட்ட ஆலோசகருக்கு பைபிள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கான சட்டப்பூர்வமான தகுதி கிடையாது என்று மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் தலைவர் கிறிஸ்டபர் லியோங் கூறியிருப்பது பற்றி கேட்டபோது காலிட் இவ்வாறு கூறினார்.
“அது சரி. அவர்கள் (வழக்குரைஞர் மன்றம்) சரியா. அவர்கள் கருத்து எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.
“எங்களுடைய நடைமுறைப்படி அந்த விவகாரத்தில் மாநில சட்ட ஆலோசகர் சட்டத்துறை தலைவரின் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்.
“அதாவது, அந்த விவகாரம் நீதிமன்றத்தால் முடிவு செய்யப்படும்”, என்று காலிட் இப்ராகிம் இன்று ஷா அலாமில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மற்ற விஷயதில் அம்னோவை பின்பற்றுவோம்
மலேசியா வலயங்கட்டிகளின் அறிவாளிகள் ஆட்சி ???
என் வாக்கு உட்பட என் சொந்தங்களின் வாக்குகள் 30க்கு மேல் நிச்சயமாக பாக்காத்தானுக்கு கிடையாது. இது உறுதி! எவனாலும் எந்த நன்மையும் அடையாதவர்கள் நாங்கள். உழைத்து சாப்பிடும் இனம். காலிட்டின் தொகுதியில் வசிப்பவன். காலிட்டிற்கு என் வாக்கு இல்லை. பாரிசான் காரனைவிட மோசமா ஜால்ரா போடுரானுங்களே…. தாங்கமுடியலடா சாமி!
இவனை செவிணி அறைவிட்டு பதிவியிளிரிந்து முதலில் தூக்கணும்