பாஸ் மத்திய குழு உறுப்பினரும் ஆய்வு மைய செயல்முறை இயக்குனருமான சுல்கிப்ளி அஹ்மட், பாஸ் மத்திய குழு உறுப்பினர்களிடையே வாட்ஸ்அப்-இல் நிகழ்ந்துள்ள சர்ச்சைக்குரிய உரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அதில் முகம்மட் ஜுஹடி மர்சுகி முன்மொழிந்தவை அவருடைய “தனிப்பட்ட கருத்துக்கள்” என்றும் அவை கட்சியினுடைய கருத்துக்கள் அல்ல என்றும் அவர் கூறினார்.
“இதைவிடவும் மோசமான விவகாரங்களை எல்லாம் அவர்கள் விவாதித்திருக்கிறார்கள்”, என்று தெரிவித்த சுல்கிப்ளி, பாஸ் கட்சி பக்காத்தான் ரக்யாட்டின் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக உள்ளது என்றார்.
“உறுப்பினர்களின் சொந்த கருத்துக்களுக்கு பாஸைப் பொறுப்பாக்க வேண்டாம்”, என்றவர் கேட்டுக்கொண்டார்.
உம்மை நேரில் கண்டிருக்கிறேன். நீர் நல்ல அறிவாளியும்கூட. ஆனால் ஏன் இப்படி சப்பைக்கட்டு கட்டுகிறீர்? இப்போதெல்லாம் மலாய்க்கார அரசியல்வாதிகள் மனம்போல பேசிவிட்டு பிரச்சினை என்று வந்த பிறகு “அது அவர்களின் தனிப்பட்ட கருத்து”என்று மனசாட்சியே இல்லாமல் மழுப்புகிறீர்கள். நான் அறிந்து உங்களின அரசியல்வாதிகளைப்போன்ற மோசமான அரசியல்வாதிகளை இந்த உலகத்தில் எங்குமே பார்த்ததில்லை. எத்துனை திருகுதாளங்கள்; எத்துனை பித்தலாட்டங்கள்?தயவு செய்து மலாய்க்காரரல்லாதாரை ஏய்க்க மனம்போனபோக்கிலெல்லாம் பிதற்றவேண்டாம். நாங்கள் ஒன்றும் விரல்சப்பிகள் அல்லர் தோழரே.
அடி அவாங் ஏன் இதனை சொல்லவில்லை?. எண்ணத்தில் உள்ளதை வெளியே சொல்வதற்குப் பயந்து தொண்டையில் நிறுத்தி வைத்திருக்கின்றாரோ?.
ஒரு கட்சியின் பொறுப்பாளர்கள் தங்களின் தனிப்பட்ட கருத்தை கூறிக்கொண்டு பிரச்சனையை கிளப்பி
கொண்டு இருந்தால் அந்த கட்சியில் ஒரு ஒழுங்கு
கட்டு பாடு இல்லை என்று தானே அர்த்தம் ,நீங்கள்
அந்த கருத்தை சொன்ன முகமட்டை கட்சியில் இருந்து
விளக்க முடியுமா , உங்களால் முடியாது ,உங்கள் கட்சியை
நம்பி ஒட்டுபோட்டவர்களுக்கு நல்ல பாடம் கற்று கொடுத்து
விட்டது பாஸ் கட்சி .
பாஸ் கட்சி ஒட்டு போடவே கூடாது, ஏறும்போது ஒரு புத்தி”இறங்கும் பொது ஒரு புத்தி” உம்னோகரனுகளோட பாஸ் கரனுங்காஹ் இனவெறி புடிச்சவனுங்க.
pas காரனுங்க ஒரு சர்வதேச முட்…..ங்க
தமிழன் அய்யா நம்மவர் இப்ப வேண்டுமானால் பாஸ் கட்சிக்கு ஒட்டு போடா மாட்டேன் என்று சொல்வார்கள் ஆனால் தேர்தல் காலம் வந்தவுடன் பாவம் எதிர்க்கட்சி என்று ஓட்டை போட்டு விட்டு இன்னொரு 5 வருடம் உங்களை போல புலம்பிக்கொண்டு இருப்பார்கள்.
Bn உட எதிர் கட்சி எவல்லவோ மேல்