யுபிஎஸ்ஆர் தேர்வுக்கான அறியல் மற்றும் ஆங்கில மொழி தாள்கள் கசிந்துள்ளதைத் தொடர்ந்து எதிர்காலத்தில் எந்த ஒரு முக்கியமான தேர்விலும் கசிவுகள் ஏற்பட்டால் பதவி துறக்க துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முகைதின் யாசின் வாக்குறுதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பள்ளி தேர்வுகளின் சீரிய நிலையைப் பாதுகாப்பதற்கான தமது ஈடுபாட்டை வெளிப்படுத்தும் வகையில் முகைதின் யாசின் பதவி துறக்கும் வாக்குறுதியை அளிக்க வேண்டும் என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் கியான் மிங் இன்று கூறினார்.
“ஆனால், இந்த வாக்குறுதியை அளிக்கும் துணிவு அவருக்கு இருக்கிறதா?”, என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கேட்டுள்ளார்.
தேர்வுத் தாள்கள் கசிந்துள்ளதற்காக முகைதின் யாசின் மன்னிப்பு கோருவது போதுமானதல்ல என்று செர்டாங் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் தெரிவித்தார்.
“செப்டெம்பர் 30 இல் நடைபெற விருக்கும் யுபிஎஸ்ஆர் அறிவியல் தேர்வு தாளில் அம்மாதிரியான கசிவுகள் ஏற்படாது என்று அவர் உறுதியளிக்க வேண்டும்”, என்று ஓங் இன்று வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
இன்னொரு கசிவு
ஆங்கில மொழி தேர்வுத் தாள்கள் 014/1 மற்றும் 014/2 (தாள்கள் 1 மற்றும் 2) கசிந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று இரண்டாவது கல்வி அமைச்சர் இட்ரீஸ் ஜூசோ இன்று கூறியிருக்கிறார்.
இக்கசிவுகளுக்கு கல்வி அமைச்சும் தேர்வு சிண்டிகேட்டும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நுருல் இசா கூறினார்.
“மன்னிப்பு மட்டும் போதாது. இக்கசிவுக்கு யார் பொறுப்பு என்பதைக் கண்டறிய ஒரு குழு அமைக்கைப்பட வேண்டும்”, என்று அவர் கேட்டுக் கொண்டார்.
சோதனைத் தாள் கசிவுக்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப் பட்டால் கூட குறிப்பாக மலாய்காரர் ஆசிரியர்களாக இருந்தால் அவர்களுக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டு வேறு பள்ளிகளுக்கோ அல்லது வேறு அரசாங்க இலாக்காவுக்கோ மாற்றப்படுவார்கள். கல்வி அமைச்சின் மேல் அதிகாரிகள் எல்லாம் மலாய்க்காரர்களே. எனவே அவர்கள்முதலில் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.மேலும் முதலில் கசிந்தது தேசியப் பள்ளி வினா தாள். ஆனால் கைது செய்யப்பட்டவர்களில் அதிகமானோர் நம் இந்திய ஆசிரியர்கள். ஆசிரியர்களின் கைபேசியில் காணப்பட்ட குறுஞ்செய்தியை ஆதாரமாகக் கொண்டே அவர்கள் கைது செய்யப் பட்டதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அப்படியிருக்க குறுஞ்செய்தி அனுப்பியவரை கண்டு பிடிக்க காவல் துறை முயற்சிக்காமல் “பெறுநர்” களை கைது செய்து “நாடகம்” அரங்கேற்றம் செய்துக்கொண்டிருக்கிறது மலேசிய காவல் துறை. எய்தவன் இருக்க அம்பை குற்றம் கூறுவது போல். வாழ்க அம்னோ ராஜ்ஜியம்.
ஒரு துணை பிரதமரை பதவி துறக்க சொல்லுவதா !!! ரொம்ப தப்பு ,,துணை பிரதமர் பதவி துறப்பதை வீட தூ.. மாட்டிகிட்டு தற்..லை செய்யவேண்டும் என்று சொல்லுங்கள் ,அதான் சரி
இங்கே என்ன நடந்தது தெரியுமா,1-40,வரை பதில் கரும்பலகையில் எலுதி விடுவர்,அதை மாணவர்கள் சிறு காகிதத்தில் எழுதிக்கொள்ளவேண்டும்.அப்படி பரிட்சையில் ஒரே மாதிரி அனைத்து மாணவர்களும் எழுதி இருப்பின் குறிப்பிட்ட பள்ளி கலவு அம்பலமாகி கைது நடைப்பெறும்.இதுவே ஈபோர் தமிழ்பள்ளியில் நடந்தவை.காகிதம்2ம்,அதே நிலை.வாழ்க நாராயண நாமம்.