சிலாங்கூர் மந்திரி புசார் விவகாரத்தில் பாஸ் கட்சி பின்பற்றி நிலையற்ற நடத்தையால் ஏற்பட்டுள்ள எதிர்வினைகளால் பாஸ் ஆளும் கிளந்தான் மாநிலத்தை பாரிசான் நேசனல் கைப்பற்றக்கூடும் என்று டிஎபி மூட்ஹ்த தலைவர் லிம் கிட் சியாங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாஸ் கட்சிக்கு எதிராகத் திரும்பியுள்ள 4.5 விழுக்காடு வாக்குகள், அது பிகேஆருக்கும் நீட்டிக்கப்படலாம், அம்மாநிலத்திலுள்ள இதர தொகுதிகளில் ஏற்படுமானால் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
நேற்றிரவு பெட்டாலிங் ஜெயாவில், டிஎபி நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பேசிய கிட் சியாங். “பெங்காலான் குபுபோரில் நடந்தது மாநில அளவில் ஏற்பட்டால், கிளந்தான் கைமாறும்”, என்றார்.
இதன் அடிப்படையில், கிளந்தான் சட்டமன்றத்தில் பக்கத்தானுக்கு 20 இடங்கள்தான் கிடைக்கும். பாரிசான் 25 இடங்களைப் பெரும் என்று அவர் மேலும் கூறினார்.
நடந்தால் நல்லது அது ஒரு பாடமாக அமையும் பாஸ் கட்சிக்கு.
அரசியலில் பழுத்த பழம் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் ! பாஸ் மக்களுக்கு இலவு கட்சியாக மாறி வருகிறது !
சொல்லிட்டாரு அப்பா தக்கர்..
அட மாங்காக்களே..கிளந்தான் முழுக்க முழுக்க மத்திய அரசின் துணையோடும் பணத்தோடும் மறைமுகமாக செயல்படுகிறது..விட்டுகொடுப்பனா மலைய்காரன்..இது தெரியாமல் கூட்டனி அமைத்து காமடி செய்து கொண்டிருக்கிறான் அபாங் அன்வர்..இதில் dap சிங் சக்..இதுல நம்ம மக்கைங்கே வேறு..
அவர் சொல்லிட்டாரு டக்கர்,நீங்க போயி முடிச்சி வையுங்க !
அப்படி நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. பாக்காத்தான் எதிர்பார்த்தது போல் செயல் படவில்லை.பல துரோகிகளும் எட்டப்பன்களும் அத்துடன் பல குறை கூறல் களுக்கு ஆளாகி இருந்தது.
முஸ்லிம் அல்லாதவர்கள் உரிமையோடு வாழ குரல் கொடுக்கும் அரசியல் வாதிகளில் ஒருவர் கிட சியாங்..நம்ம புடலங்காய் அரசியல் வாதிகளை விட எவ்வளவோ மேல்..
சீனன் tauke கடைசியில் “tak tahu , lu siapa ” என்று சொல்லிவிடுவான்..