‘எது சரி எது தவறு என்பதை புரிந்து கொண்டுள்ள யூஐஏ என்ற அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.’
அஜிஸ் பேரி மீதான இடைநீக்கத்தை பல்கலைக்கழகம் அகற்றுகிறது
அடையாளம் இல்லாதவன்_4182: பேராசிரியரியருடைய இடைநீக்கம் அகற்றப்பட்டதுடன் அந்த அத்தியாயம் நிறைவுக்கு வருமா ? உண்மையிலேயே பெரிய குழப்பம் தான். அரசியல்வாதிகள் இதில் ஏன் சம்பந்தப்படுகின்றனர் ?
அதற்கு அச்சம் காரணமா ? அரசாங்கம் அமைத்துள்ள முறைகளை குறை கூறுகின்ற அனைவரையும் கண்டு அச்சமா ? அந்தக் கொள்கைகள் நியாமானதாகவும் பொருத்தமானதாகவும் இருந்தால் ஏன் அச்சப்பட வேண்டும் ? நமது மாணவர்கள் தெளிவான நியாயமான சிந்தனைகளைக் கொண்டிருப்பது முக்கியமில்லையா ?
தேர்தல் எந்த நேரத்திலும் வரலாம் என்பதால் அந்த முறைகளை அதிகமான மக்கள் குறை கூறும் போது எல்லாம் வெளிச்சத்துக்கு வந்து விடக் கூடும் என்ற அச்சமா ? நீங்கள் அச்சமடைந்து மறைப்பதற்கு விஷயங்கள் இருந்தால் உங்கள் நிழல் கூட உங்களுக்கு எதிரியாகி விடும்.
ரூபன்: செனட்டர் எஸாம் முகமட் நோர், கூலிம்- பண்டார் பாரு எம்பி சுல்கிப்லி நூர்டின், உத்துசான் மலேசியா, அவர்களுக்கு பின்னணியில் உள்ளவர்கள் ஆகிய அனைவருக்கும் விழுந்த பெரிய அடி இதுவாகும்.
அவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு தாக்குகின்றனரோ அந்த அளவுக்கு எதிர் விளைவுகள் கடுமையாக இருக்கும்.
பொய்கள், ஊழல்கள், அப்பாவி மக்கள் மீது அவதூறுகள், அரசாங்கத்தின் மீது அதிருப்தியை காட்டும் மக்களை நடத்தும் விதம், மக்களை என்ன விலை கொடுத்தாவது பிரிக்க முயலுவது ஆகியவற்றால் மக்கள் வெறுப்படைந்து விட்டனர்.
பிராமன்: தங்களது அரசியல் எஜமானர்கள் செய்வது சரியோ தவறோ, அவர்களுடைய கைப்பாவைகளாக அரசாங்க ஊழியர்களும் போலீசாரும், நீதித் துறையும் ஏன் ஆயுதப்படைகள் கூட மாறி வருகின்றனர்.
அவ்வாறு செய்வதால் தங்களுக்கு நிறைய வெகுமதி கிடைக்கும் என அவர்கள் நம்புகின்றனர். அந்தப் பாரம்பரியம்- நம் நாட்டை புற்று நோயாக வாட்டிக் கொண்டிருக்கிறது- அதனை விட்டுச் சென்றவர் ஒரு டாக்டர்.
எது சரி எது தவறு என்பதை புரிந்து கொண்டுள்ள யூஐஏ என்ற அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். வயதான தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்களுக்கு அது தெரியவில்லையே ?
குவிக்னோபாண்ட்: அஜிஸ் பேரியை அவர்கள் இடைநீக்கம் செய்ததே முதலில் பெரிய தவறு. அதனை மீட்டுக் கொண்டதின் மூலம் தங்களுக்கு முதுகெலும்பு இல்லை என்பதை அவர்கள் இப்போது காட்டி விட்டனர். அதனால் அந்தப் பல்கலைக்கழகத்தின் நம்பகத்தன்மையே காற்றில் பறந்து விட்டது.
அடையாளம் இல்லாதவன்: பேராசிரியர் அப்துல் அஜிஸ் பேரி-க்காக எழுந்து நின்ற மாணவர்களுக்கு என் வாழ்த்துக்கள். அவர்கள் எஜமானர்கள் அல்ல என்பதையும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுடைய சேவகர்களே என்பதையும் அந்தக் கோமாளிகளுக்கும் குண்டர்களுக்கும் நாம் உணர்த்துவோம்.
அவர்கள் வரலாம் போகலாம். இந்த நாட்டை யார் ஆளுவது என்பதை முடிவு செய்வது மக்களே.
அரமாகெடோன்: அரசியலில் பேராசிரியர் அஜிஸ் நடுநிலையாக இருந்திருந்தால் அவர் இப்போது பிஎன் எதிர்ப்பாளராக மாறியிருப்பார்.
பெண்டர்: எல்லாப் புகழும் இறைவனுக்கே. உண்மையை வலியுறுத்திய அனைவருக்கும் இது வெற்றியாகும்.
அடையாளம் இல்லாதவன்_3e4b: யூஐஏ மாணவர்கள் வெளியிட்ட சிறந்த அறிக்கை- ஒருவர் விழுந்தால் ஆயிரக்கணக்கானவர் மில்லியன் கணக்கானவர்கள் விழித்து எழுவர்