அதிகாலை குண்டு வெடிப்பில் புக்கிட் பிந்தாங் அதிர்ந்தது

blastஇன்று  அதிகாலை கோலாலும்பூர்  புக்கிட்  பிந்தாங்கில்  ஓர்  இரவு  விடுதிக்கு  வெளியில் நிகழ்ந்த  ஒரு  வெடிப்பில்  குறைந்தது  14 பேர்  காயமடைந்தனர்.

சன் கொம்ளெக்ஸுக்கு  வெளியில்  ஒரு  காருக்கு  அடியில்  குண்டு வெடித்ததுதான்  இதற்குக் காரணம்  என  ஊடகத்  தகவல்கள்  கூறின.

குண்டு  வைத்தவர்கள்  குண்டர்  கும்பலைச்  சேர்ந்தவர்கள்  என  சீன  நாளேடுகள்  தெரிவிக்கின்றன.

குண்டு  வெடிப்பு  நிகழ்ந்ததை கோலாலும்பூர்  சிஐடி  தலைவர்  உறுதிப்படுத்தியதாக  அஸ்ட்ரோ  அவானி கூறியது.

குண்டு  வெடித்த  அதே  தெருவில்  நிறுத்தப்பட்டிருந்த  இன்னொரு  காரிலிருந்து  வெடிக்காத  குண்டு  ஒன்று  கண்டெடுக்கப்பட்டதாக  கோலாலும்பூர்  போலீஸ்  துணைத்  தலைவர்  கைரி அஹ்ராசா  தெரிவித்ததாக டிபிஏ   செய்தி  நிறுவனம்  கூறிற்று.