அகோங், மாநில ஆட்சியாளர்கள் ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்குப் பெறுகின்றனர்

 

Agong no gstஅடுத்த ஆண்டு ஏப்ரல் ஒன்றிலிருந்து அமலாக்கப்படவிருக்கும் ஜிஎஸ்டி என்ற பொருள்கள் மற்றும் சேவைகள் வரியிலிருந்து பெட்ரோலிய பொருள்கள் தவிர இதர அனைத்து பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான வரிகளிலிருந்து அகோங் மற்றும் மாநில ஆட்சியாளர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று அரசாங்கம் வெளியிட்ட கெஜட்டில் இத்தகவல் தரப்பட்டுள்ளது.

“Goods and Services Tax (Relief) Order 2014 என்ற தலைப்பிலான 42 பக்கங்களைக் கொண்ட அந்த ஆவணத்தில் ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட தனிப்பட்டவர்கள் மற்றும் குழுக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அதில் அவர்கள் ஜிஎஸ்டி வரி கட்டாமல் இறக்குமதி அல்லது வாங்கும் பொருள்கள் மற்றும் அவற்றுக்கான நிபந்தனைகள் இடம்பெற்றுள்ளன.