பெடரல் உச்சநீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வின் முன்பு இன்று காலை மணி 9.30 க்கு தொடங்கிய அன்வார் குதப்புணர்ச்சி வழக்கு II பிற்பகல் மணி 1.00 வரையில் நடந்த விசாரணையில் அன்வாரின் மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் கோபால் கீழ்க்கண்ட வாதத்தை முன்வைத்தார்:
சாட்சிகள் இல்லை
சுமத்தப்பட்டுள்ள இக்குற்றத்திற்கு சாட்சிகள் எவரும் இல்லை. பின்னர், முன்னாள் போலீஸ் படைத் தலைவரை (ஐஜிபி) சைபுல் அழைத்திருக்கிறார்.
குதப்புணர்ச்சியில் ஈடுபட தாம் பலவந்தப்படுத்தப்பட்டதாக சைபுல் கூறியிருந்ததோடு வழவழப்பைக் கொடுக்கும் ஜெல்லி (KY Jelly) பயன்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.
குதப்புணர்ச்சி செயல் படுசுறுசுறுப்பாக இருந்ததால் ஜெல்லி குழலை அவர் அழுத்தியதாகவும் அதிலிருந்த ஜெல்லி கம்பள விரிப்பில் விழுந்தது என்பது சாட்சியமாகும்.
அதன் பின்னர் தம்மை சுத்தப்படுத்திக் கொண்டு தாம் வேலையிலிருந்து ராஜினாமா செய்வதாக அன்வாரின் உதவியாளருக்கு இமெயில் அனுப்பியதாக சைபுல் கூறியுள்ளார்.
ராஜினாமா கடிதத்தை அனுப்பி விட்டு, சைபுல் அன்வார் வீட்டிற்கு சென்றதோடல்லாமல் அங்கு பானங்களையும் பரிமாறியுள்ளார்.
சைபுல் புஸ்ராவி மருத்துவமனை டாக்டர் (முகமட்) ஓஸ்மானை சந்தித்துள்ளார். அங்கு ஒரு பிளாஸ்டிக்காளான ஒரு பொருள் அவரது குதத்தில் திணிக்கப்பட்டது.
“ஆனால், அந்த அறிக்கையை வெளியிட்டதாக கூறுவதை சைபுல் மறுத்துள்ளார். டாக்டர் ஓஸ்மானுடனான சந்திப்பில் தாம் குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறியுள்ளார். அவர் கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.”
மூன்று டாக்க்டர்கள் சைபுல்லை சோதித்தனர். அவர்களின் தொடக்க கண்டுபிடிப்பு உள்ளே எதுவும் நுழைக்கப்படவில்லை என்பதாகும்.
அதன் பின்னர், சைபுல் டிஎஸ்பி ஜூட் பெரராவை சந்தித்ததோடு போலீஸ் புகார் ஒன்றை செய்தார்.
சைபுல்லின் இரண்டு உள்ளாடைகள் சாட்சியங்களாக வைக்கப்பட்டன. அவற்றில் ஒன்று துவைக்கப்பட்டு ஈரமாக இருந்தது.
“இரண்டாவது உள்ளாடையை சம்பவம் நடந்த நாளில் சைபுல் அணிந்திருக்கவில்லை. ஆனால் அதில் விந்து கறை இருந்தது.”
போலீஸ் விசாரணைக்குப் பின்னர், அனவார் குற்றம் சாட்டப்பட்டார். விசாரணையின் போது கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி குற்றம் சாட்டப்படுள்ளவருக்கு (அன்வார்) எதிராக போதிய சாட்சியங்களுடன் வழக்கு நிறுவப்பட்டுள்ளது என்று கூறினார்.
அதன் பின்னர், குற்றம் சாட்டப்பட்டவருக்கு (அன்வார்) எதிரான அரசு தரப்பின் வழக்கு தமக்கு திருப்தி அளிக்கவில்லை என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
அன்வாரை விடுவித்த உயர்நீதிமன்ற தீர்ப்பினால் திருப்தியடையாத அரசு தரப்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முறையீடு செய்தது. இறுதியில் மேல்முறையீட்டு நீதிமன்றம் அன்வாரை குற்றவாளியாக தீர்ப்பளித்து அவருக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதித்தது.
மேற்கண்ட விபரங்களை வழங்கிய ஸ்ரீராம் கோபால், சைபுலின் சாட்சியத்தை ஆய்வுக்கு உட்படுத்தினார்.
சைபுல் ஒரு நம்பத்தக்க சாட்சி மற்றும் அவரது சாட்சியம் ஆதாரங்களால் உறுதி செய்யப்பட்டுள்ளன என்ற மேல்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருப்பது தவறு.
மேலும், போலீஸ் அதிகாரி ஜூட் பெரராவின் புலன்விசாரணை குறித்த அறிக்கையை சோதனைக்கு உட்படுத்துவது தற்காப்பு தரப்பினரின் உரிமையாகும்.
மேல்முறையீட்டின் முதல் காரணம் போலீஸ் புகார் செய்ய தாம் பயந்ததாக சைபுல் கூறிக்கொண்டதாகும்.
புஸ்ராவி மருத்துவமனை டாக்டர் ஓஸ்மான் தொடக்கத்தில் சைபுல் போலீஸ் புகார் செய்ய விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மருத்துவ அறிக்கை சைபுலிடம் காட்டப்பட்டது. அதை அவர் மறுத்துள்ளார்.
சைபுல் மூத்த போலீஸ் அதிகாரியை (முகமட் ரோட்வான்) சந்தித்துள்ளார். ஐஜிபியை அழைத்துள்ளார்.
தாம் குதப்புணர்ச்சிக்கு உட்படுத்தப்படுவதை விரும்பாத ஒருவர் ஜெல்லியை கொண்டு வந்திருக்க மாட்டார்.
“ஜெல்லி இருந்ததாக கூறுவது சந்தேகத்திற்குரிய விசயமாகும்.
இந்த மண்ணில் நடந்துகொண்டிருப்பதைப் பார்த்து உலகமே ஆசன வாயால் சிரித்துக் கொண்டிருக்கிறது !
யார் என்ன உண்மை கூறினாலும் எடுபட போவதில்லை. அன்வாரை கம்பி எண்ண வைப்பதே கடைசிவரை நடக்கும். நீதிகாக்கப்படும் என்பதற்கு ஒரு அறிகுறியும் இல்லை. அம்னோ குஞ்சுகள் சுத்தியை வைத்து அன்வாரின் தலையில் அடிக்க காத்து கொண்டிருக்கின்றனர்.
அன்வாருக்கு எனது அனுதாபங்கள்.
மறுபடியும் மெத்தை நாலாயுமா???மனகேட்ட வழக்கு.என்ன நாடு |||
சரியாக சொன்னீர்கள் APGK.
என்னப்பா இது ………..ஒருதனை மாட்டிவிட இப்படியும் செய்வார்களா?
ஒருவனை மாட்டிவிடுவதர்க்கு எத்தனை தில்லாலங்கடி வேலை ? நீதி வழுவாத செங்கோல் !!!
எப்படியாவது அவரை சிறையில் தள்ளி விட வேண்டும்.தனி மனிதரைக் கண்டு ஒரு அரசாங்கமே பயப் படுகிறது.ஒரு கேவலமான அரசாங்கம்.
மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் கோபால் ,,,ஆ தமிழனடா ,சும்மாவா ,தன் மகனுக்கு காக போடு போடுன்னு போட்டவருல ,,வழக்குரைஞர் ஸ்ரீராம் கோபால் இருக்கும் வரையிலும் அன்வாருக்கு 100% ஜெயம் .
எத்தனை முரைதான் அன்வாரை சிரையில் அடைப்பீர்கள்.நீதி செத்துவிட்டதா,அல்லது தூங்கிக்கொண்டிருக்கிறதா?
சைபூல் அப்பனே இது ஒரு ஜோடிக்கப்பட்ட கதையென ஏற்க்கனவே ஒத்துகிட்டான். இப்ப மறுபடியும் கிளறி பணம் பறிக்க திட்டமிடுவதோடு, அன்வாரை இதோடு முடித்து விட அம்னோவும் களம் இறங்கி இருக்கிறது..?
அன்வாரை தாக்குபவர்கள் எதையுமே எழுத காணோம் ,shanti
கூடவா? குதபுணர்ச்சி பற்றி எப்படி எழுதுவது என்று யோசிக்கிறாரா ?