பெர்க்காசா ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் கூடிய “பொருத்தமற்றவர்கள்”

“முன்னாள் ஐஜிபி, ஒரு நல்ல விஷயத்தையும் கெட்ட விஷயத்தையும் இணைத்து அதனை தீயதாகக் காட்டுவது உண்மையில் வியப்பைத் தருகிறது.”

“மனித உரிமை அலை” குறித்து முன்னாள் ஐஜிபி ரஹிம் நூர் எச்சரிக்கிறார்

இடைத் தேர்தல் விசிறி:”‘மனித உரிமை அலை’ பற்றி எச்சரிக்கையாக இருங்கள். அந்த அலை நமது நாடு தோற்றுவிக்கப்பட்ட கோட்பாடுகளுக்கு மருட்டலாக விளங்குகிறது.” முன்னாள் ஐஜிபி அப்துல் ரஹிம் நூர் அவர்களே, நீங்கள் எதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?

மனித உரிமைகள் யாருக்கும் எப்போதும் மருட்டலாக இருந்ததில்லை. கறை படிந்த அரசியல்வாதிகள் குறிப்பாக அம்னோவில் உள்ளவர்கள், ஊழலான அரசாங்க ஊழியர்கள் ஆகியோரே மனித உரிமைகளைக் கண்டு அஞ்சுகின்றனர்.

வழிகாட்டி: ரஹிம் சொல்வது உண்மை. மனித உரிமைகளை கட்டுப்படுத்தா விட்டால் சர்வாதிகாரிகள் போக மாட்டார்கள். போலீஸ் தலைவர்களும் எதிர்க்கட்சித் தலைவர்களுடைய முகங்களைத் துணிச்சலாகத் தாக்கவும் முடியாது.

பெர்க்காசா தம்பட்டம் அடித்துக் கொள்வதற்கு – அவமானத்துக்கு இலக்கான அந்த முன்னாள் போலீஸ் தலைவர்தானா கிடைத்தார்?

ஸ்விபெண்டர்: அந்த முன்னாள் குற்றவாளி சீன, கம்யூனிஸ்ட் பூச்சாண்டியைக் காட்டி “மேலாண்மை” ( ‘ketuanan’ )என்ற தத்துவத்தை தொடருவது பற்றிப் பேசுகிறார்.

அவருடைய குறுகிய கண்ணோட்டத்தை பொறுத்த வரையில் சுதந்திரம், சமநிலை, நீதி ஆகியவற்றுக்கு வாதாடும் எந்த மலாய்க்காரரும் கம்யூனிஸ்ட்களின் கைப்பாவைகள், தமது இனத்திற்கும் சமயத்துக்கும் துரோகம் செய்கின்றவர்கள் ஆவர்.

“இந்த நாடு தோற்றுவிக்கப்பட்ட கோட்பாடுகள்” பற்றி அவர் விளக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். “மேலாண்மை” என்னும் சித்தாந்தம் கண்டு பிடிக்கப்பட்ட,  தயாரிக்கப்பட்ட, நியாயப்படுத்தப்பட்ட்ட  சமூக ஒப்பந்தம் பற்றி” அவர் பேசுகிறாரா?

“சமூக ஒப்பந்தம்” இருந்தது என்பதை இதுவரை யாரும் மெய்பிக்கவில்லை. அப்படி ஒன்று இருப்பதாக டாக்டர் மகாதீர் முகமட்-டும் அம்னோவும் சொல்வதை நாம் நம்ப வேண்டும். அதன் வழி நமது நாட்டை இனம், சமயம், வம்சாவளி அடிப்படையில் அமைந்த எல்லா வகையான பாகுபாடுகளையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அனாக் பினாங்: நமது உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்காக சட்ட அமலாக்க உரிமை வழங்கப்பட்டிருந்த முன்னாள் போலீஸ் தலைவர் சிவில் சமூகம் தனது உரிமைகளைக் கோருவதால் ஏற்படும் “அபாயங்களை” எச்சரிக்கிறார். எவ்வளவு வினோதமாக இருக்கிறது பார்த்தீர்களா?

உங்கள் அடிச் சுவட்டில்: நீங்கள் இந்த நாட்டின் முதலாவது சட்ட அமலாக்க அதிகாரியாக இருந்த போது ஒருவரை, கண் கறுத்துப் போகும் அளவுக்கு தாக்கியுள்ளீர்கள். ஆகவே எதைப் பற்றியும் பேசுவதற்கு உங்கள் என்ன தகுதி இருக்கிறது?

இந்த நாடு மனித உரிமைகள் அடிப்படையில் தோற்றுவிக்கப்படவில்லை என நீங்கள் சொல்ல வருகின்றீர்களா? ஆகவே எஜமானர்-அடிமை என்னும் கோட்பாட்டில் அமைக்கப்பட்டதா?

ஜெரார்ட் சாமுவேல் விஜயன்: கம்யூனிஸ்ட்களும் மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகளும் மருட்டலாகத் திகழ்ந்த கடந்த காலத்தில் அந்த மனிதர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆகவே போலீஸ் படை என்பது சர்வாதிகார, ஜமீன் ஆட்சிகளின் ஒர் அங்கம்  என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.

மை தோர்: தாம் அம்னோ அல்லது பெர்க்காசா உறுப்பினர் அல்ல என ரஹிம் பிரகடனம் செய்து கொண்ட போதிலும் தமது மற்றும் அம்னோ ஆதாயத்துக்காக மலாய்க்காரர்களை ஒன்றுபடுத்தும் எண்ணத்துடன் மலாய்காரர் அல்லாதாரை குறிப்பாக சீனர்களை கண்டிக்கும் அம்னோ, பெர்க்காசா பாணியை பின்பற்றியிருக்கிறார்.

நேர்மையான மலாய்க்காரர்களுக்கு அம்னோ தலைவர்களும் அவர்களுடைய கூஜாக்களும் செய்து வரும் “பாவங்கள்” நன்றாகத் தெரியும் என்பதை ரஹிம் நூர் புரிந்து கொள்ளத் தவறி விட்டார்.

பெர்க்காசா அமைப்பின் இரண்டாவது ஆண்டுப் போதுக் கூட்டத்தை நீங்கள் தொடக்கி வைத்து ஆற்றிய உரை, நீங்கள் “அன்வாரை வெறுக்கும் மன்றத்தில்” ஒர் உறுப்பினர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு கூட்டுப் பறவைகள் ஒன்று கூடுவது இயல்பாகும்.

மஞ்சித் பாட்டியா: ரஹிம் நூர், ஒரு கிரிமினல் குற்றவாளி. பெர்க்காசாவுக்கும் அம்னோவுக்கும் அவர் கடமைப்பட்டுள்ளார்.

மஞ்சித் பாட்டியா: ரஹிம் நூர் சொல்வதை மலாய் சமூகத்தில் சரியான சிந்தனை உள்ளவர்கள் யாரும் நம்பவே மாட்டார்கள். குறிப்பாக மலேசியாவுக்கு கம்யூனிசம் திரும்பும் என்று அவர் சொல்வதை அவர்களில் யாரும் ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள்.

நிக் வி: முன்னாள் ஐஜிபி, ஒரு நல்ல விஷயத்தையும் கெட்ட விஷயத்தையும் இணைத்து அதனை தீயதாகக் காட்டுவது உண்மையில் வியப்பைத் தருகிறது. கடந்த காலத்தில் இன்னும் வாழ்கின்ற ஒரு கிழவருடைய வாதமே அதுவாகும்.

TAGS: