அன்வார் சிறை சென்றால் பக்கத்தான் ஆட்டம் முடிந்துவிடும்

fuadஅன்வார்  இப்ராகிம்  சிறை  செல்லும் சாத்தியம்  இருப்பதால்தான்  லிம்  கிட்  சியாங்  பக்கத்தான்  எதிர்காலம்  குறித்து  நம்பிக்கை  இழந்து  பேசுகிறாராம்.  அம்னோ  தலைவர்  ஒருவர். கூறுகிறார்.

“அன்வார்  சிறைக்குச்  சென்றால் யார்  எதிரணித்  தலைவர்  ஆவார்”, என  முகம்மட்  புவாட்  ஸார்காஷி  வினவினார்.

“லிம், (அப்பதவிக்கு) வருவதை  பாஸ்  ஆட்சேபிக்கும். இரண்டுக்குமிடையில்  இன்னும்  தகராறு  தீரவில்லை.

“அப்பதவிக்கு (பாஸ் தலைவர்) அப்துல்  ஹாடி  நியமிக்கப்பட்டால்  டிஏபி  எதிர்க்கும்”, என்றவர்  அம்னோ  ஆன்லைன்  தளத்தில்  பதிவிட்டிருக்கிறார்.

பாஸ், டிஏபி இரண்டுமே, பிகேஆர்  தலைவர்  டாக்டர்  வான்  அசிசா  வான் இஸ்மாயில்  தம்  கணவர்  வகித்த பதவியை  ஏற்பதை  விரும்பமாட்டா. அவை  இரண்டும்  அவரை  ஒரு  பலவீனமான  தலைவராக  கருதுவதாக  என  அம்னோ  உச்சமன்ற  உறுப்பினரான  புவாட்  கூறினார்.