கோலாலும்பூர் போலீஸ் லாக்-அப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த என். தர்மேந்திரனைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நான்கு போலீஸ் அதிகாரிகளை கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் இன்று விடுவித்தது.
நால்வர்மீதும் குற்றஞ்சாட்ட போதுமான ஆதாரங்கள் இல்லை என்று நீதிபதி கமருடின் ஹஷிம் தீர்ப்பளித்தார்.
கெடா, சுங்கை பட்டாணி இன்ஸ்பெக்டர் எஸ்.ஹரி கிரிஷ்ணன்,41, சர்ஜெண்ட் ஜப்ரி ஜாப்பார்,45, கார்ப்பரல் முகம்மட் நஹார் அப்ட் ரஹ்மான், 46, கார்ப்பரல் முகம்மட் ஹஸ்வாடி ஸம்ரி ஷாரி,33, ஆகியோரே அந்நால்வருமாவர்.
ஜாலான் ஹங் துவா, கோலாலும்பூர் போலீஸ் தலைமையகத்தின் 7வது மாடியில் உள்ள டி9 விசாரணை அலுவலகத்தில் அந்நால்வரும் அக்குற்றத்தைப் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
சந்தர்ப்பச் சூழ்நிலையை வைத்து அவர்களை எதிர்வாதம் செய்ய அழைப்பது முறையல்ல என்று நீதிபதி கமருடின் கூறினார்.
தெரிந்ததே
உலகிலேயே நீதிக்கு தலை வணங்கும் நாடு, நம் நாடு. எந்த குற்றவாளியையும் தண்டிக்கவே தண்டிக்காது. [ ஆ!அது என்ன ஒரு ‘ஆவி’ என்னை துரத்துது. ஆ…ஆ…..அல்ல்தாந்துயாவா!…….}
நீதி செத்துவிட்டதா!
இதில் எல்லாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.எல்லாம் தெரிந்ததே. அதிலும் நம்மவர்கள் சம்பந்த பட்ட எல்லாமே இப்படிதான் முடியும். MIC ஜால்ராக்களுக்கு சூடு சொரணை மானம் ஈனம் ஒன்றுமே கிடையாது. அமைச்சர் ஆகா இருந்தும் அம்னோ ஈனனிடம் அடிவாங்கியும் புத்தி வரவில்லை.
முஸ்லிம் நன்னெறி எப்படியோ ….?
கிருஷ்ணா , கர்ம வினை , உன்னை வதைக்கும் ….!
எதிர் பார்த்த அருமயான தீர்ப்பு .
செத்தது என்ன சுதந்திர போராட்ட வீரரா..
…………………………….
எது எப்படியோ நடந்தது நடந்து விட்டது அவர் ஆத்மா sorga பதவி அடைய வாழ்த்துவோம்.