பள்ளிகள் திறக்கப்படுவதில் தாமதம்

victimவெள்ளத்தால்  துயர்த்துடைப்பு  மையங்களில்  இருப்போர்  எண்ணிக்கை  225,730.

பெர்னாமா  புள்ளிவிவரப்படி  கிளந்தானில்  வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை  தொடர்ந்து  உயர்ந்து  வருகிறது. மற்ற  மாநிலங்களில் சிறிது  குறைந்துள்ளது.

திரெங்கானுவில் குறிப்பிடத்தக்க  மாற்றம்  ஏற்பட்டுள்ளது. அங்கு  நேற்றிரவு  துயர்த்துடைப்பு  மையங்களில்  இருந்த  36,210  பேரில்  2,130 பேர்  வீடு  திரும்பியுள்ளனர்.

இதனிடையே,  வெள்ளப்  பேரிடர்  காரணமாக  2015-இல்  பள்ளிகள்  தாமதித்து   திறக்கப்படும்  எனத்  துணைப்  பிரதமரும்  கல்வி  அமைச்சருமான  முகைதின் யாசின் அறிவித்துள்ளார்.

கெடா, கிளந்தான்,  திரெங்கானு,  ஜோகூர்  ஆகிவற்றில் 2015, ஜனவரி  11, ஞாயிற்றுக்கிழமை  பள்ளிகள்  தொடங்கும். நாட்டின்  மற்ற  பகுதிகளில்  ஜனவரி 12-இல்.