சூதாட்ட மன்னர் எனக் கூறப்படும் பால் புவாவுக்குப் பரிந்து உள்துறை அமைச்சர் அமெரிக்கப் புலனாய்வுத் துறை(எப்பிஐ)க்கு எழுதிய கடிதத்துக்கு மேலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கடிதம் எழுதியது ஒரு தவறான செயல் அல்லவென்று கடந்த வாரம் கூறிய அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, அதிகாரத்துவ இரகசியச் சட்டத்தைச் சுட்டிக்காட்டி அது பற்றி மேலும் விளக்கமளிக்க மறுத்ததுடன் “எதிரணி-ஆதரவு வலைத்தளங்கள்”தான் அதைப் பெரிதுபடுத்திவிட்டன என்றும் குறைகூறி இருந்தார்.
கடிதம் பற்றிக் கருத்துத்துரைக்க விரும்பாமல் இப்போதைய போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் மவுனம் காக்கும் வேளையில் முன்னாள் போலீஸ் படைத் தலைவர் அப்துல் ரஹிம் நூர் அது பற்றிக் கருத்துரைத்துள்ளார்.
அமெரிக்காவில் வழக்கை எதிர்நோக்கும் ஒரு மலேசியரான புவா-வின் நிலையைத் தெளிவுப்படுத்தத்தான் அக்கடிதம் எழுதப்பட்டது என்றாலும்கூட ஜாஹிட் அதை எழுதியிருக்கக் கூடாது என்று ரஹிம் குறிப்பிட்டார்.
புவா 14கே இரகசியக் கும்பல் உறுப்பினரா என்பதை விளக்குமாறு புவாவின் வழக்குரைஞர்கள் மலேசியாவைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் போலீஸ் கூட அப்படிப்பட்ட ஒரு கடிதத்தை எழுத வேண்டிய அவசியமில்லை.
“அமைச்சர் அதில் சம்பந்தப்பட்டிருக்கக் கூடாது. போலீசும்கூட சம்பந்தப்பட வேண்டியதில்லை.
“அமைச்சரைப் பிரதிநிதிக்காமல் ஒரு வழக்குரைஞர் அதை எழுதியிருந்தாலே போதுமானது”, என்று ரஹிம் கூறியதாக சினார் ஹரியான் அறிவித்துள்ளது.
மேலும் கருத்துரைத்த ரஹிம், புவா தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருந்தாரா என்பதை ஜாஹிட் வெளியிட்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்தார்.
மலேசியாவில் 14கே இரகசியக் கும்பல் செயல்படுகிறதா, புவா அதில் உறுப்பினரா என்பதற்கு மட்டுமே பதில் அளித்திருக்க வேண்டும்.
“புவா தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் ஒத்துழைத்தாரா என்று கேட்கப்பட்டிருந்தால்கூட அதற்குப் பதில் அளித்திருக்கக் கூடாது. ஏனென்றால் அது அமெரிக்காவுக்கு அவசியமில்லாதது”, என்று ரஹிம் கூறினார்.
இதெல்லாம் எங்களுக்குப் புரிகின்றது. ஆனால் அங்கே அரை வேக்காடு மந்திரிகள் நிறைவாகவே உட்கார்ந்திருக்கும் பொழுது அரசாங்கத்தின் செயல்பாடும் அவ்வாறே இருக்கும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு சிறந்த முன்னுதாரணம்.
இப்படி ஆயிமாயிரம் லேட்டேர்கள் புழக்கத்தில் உண்டூஊஊஊஒ …ஒரு கேஸ் உண்டு BN சட்ட மன்ற உறுப்பினர் ஒரு நிலம் விவகாரத்தில் வாதிக்கும் லட்டர் பிரதிவாதிக்கும் லட்டர் கேஸ் அப்பிள் கோர்ட் வரை உள்ளது.ஆனால் .இந்த லட்டர் நோ ரெலெவண்ட் இதை வைத்து சத்திய பிரமான சுரட அகுவன் சும்பாஹ் வுக்கும் கோர்டில் வேலை இல்லையாம். ஆனால் எக்ஸ்கோவில் இந்த சுராத் சும்பாஹ் ஒரு காட்சி பொருள். ஆள் காசு மணி மணி ஈ ..பால் அள்ளி கொடுக்க கில்லி அனுபபவிக்கதானே மனுஷன். ஐ என்றால் அழகாம் போய் விக்ரம் படம் பாருங்கா புது கதாநாயகி லோ !