நெகிரி செம்பிலான் செய்வதை மற்ற மாநிலங்களும் செய்யுமா?

convertநெகிரி  செம்பிலான்  இஸ்லாமிய  விவகார   மன்றம்  மதமாற்றத்தால்  ஏற்படும்  பிரச்னைகளைத்  தீர்ப்பதற்குப் புதிய  சட்டம்  கொண்டுவருவதை  அனைத்துக்  கட்சிகளும்  வரவேற்றிருக்கின்றன.

டிஏபியும் கெராக்கானும்,  மதம்  மாற  நினைக்கும்  முஸ்லிம்-அல்லாத  தம்பதிகள்  முதலில்  மணமுறிவு  செய்துகொள்ள  வேண்டும்  என்னும்  அச் சட்டத்தை  மற்ற  மாநிலங்களிலும்  நடைமுறைப்படுத்த  வேண்டும்  என்று  கேட்டுக்  கொண்டிருக்கின்றன.

“வருங்கால  சர்ச்சைகளைத்  தவிர்க்க  மற்ற  மாநிலங்களும்  அதைப்  பின்பற்றுவது  மிகவும் நல்லது”, என  கெராக்கான்  தேசிய  இளைஞர்  துணைத்  தலைவர்  எண்டி யோங்  கூறினார்.

இப்புதிய  விதிமுறை ‘மிகப் பொருத்தமானது’ ‘நீண்டகாலத்துக்கு  முன்பே  வந்திருக்க  வேண்டியது’  எனக்  குறிப்பிட்ட  டிஏபி-இன்  ஈப்போ  பாராட்  எம்பி  எம்.குலசேகரன்  இதை (நெகிரி  செம்பிலான்) இஸ்லாமிய  சமய  நிர்வாகச் சட்டத்துடன்  சேர்த்துக்கொள்ள  வேண்டும்  என்றார்.