எண்ணெய் விலை உயர்கிறது

petrolகடந்த சில  மாதங்களாக முன் எப்போதுமில்லாத  அளவுக்கு  விலை  குறைந்திருந்த  ரோன் 95, ரோன் 97,  டீசல்  ஆகியவற்றின்  விலை  இன்று  நள்ளிரவுக்குப்  பின்னர்  உயரும்.

கடந்த  மாதம்  உலகளவில் ஏற்பட்ட  கச்சா  எண்ணெய்  விலை  வீழ்ச்சியைத் தொடர்ந்து  பெட்ரோல்  நிலையங்களில்  எண்ணெய் விலை மிகவும்  குறைந்திருந்தது. ரோன் 95, ரோன் 97,  டீசல்  ஆகியவை  முறையே  ரிம1.91, ரிம 2.11, ரிம 1.93க்கு  விற்கப்பட்டன.

இப்போது  கச்சா  எண்ணெய்  விலை  உயர்ந்து  வருவதால்  அதற்கேற்ப   ரோன் 95, ரோன் 97,  டீசல் ஆகியவற்றின்  விலையும் உயரும்.