லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார்மீது போலீஸ் விசாரணை செய்கிறதா என்று உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி-இடம் வினவியதற்கு அக்கேள்விக்கு இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ்தான் பதில் சொல்ல வேண்டும் என்றார்.
“அது போலீஸ் நடவடிக்கை பற்றிய கேள்வி. அதற்குப் பதில் சொல்ல வேண்டியவர் ஐஜிபி”, என ஜாஹிட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அன்வார் இப்ராகிமின் குதப்புணர்ச்சி வழக்கு தொடர்பில் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்காக நுருல் இஸ்ஸாமீது போலீஸ் விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்கள்.
அவரது உரை தேச நிந்தனைக் கருத்துகள் கொண்டது என கூலிம் பண்டார் பாரு எம்பி சுல்கிப்ளி நூர்டின் புகார் செய்ததை அடுத்து போலீஸ் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
நாடாளுமன்றத்தில் பேசுவதை எக்காரணம் கொண்டும் யாரும் பிரச்சனை ஆக்க முடியாது. நாடாளுமன்றத்திற்கு வெளியே பேசினால் தான் குற்றம்.
இந்தோனேசியகாரன் ……………..பேசறான் மலேசியா பிரஜைகள்அன்னியர்கலகிவிட்டனர்
ஓ இவரா ,இவரு பணக்கார சீனரிடம் பொய் கடிதம் எளிதியவராசே ! பூனை ஜெயிலுக்கு போயிரிச்சி ,எலி வெளியிலே வந்து சுதந்திரமா வாலாட்டிகிட்டு பேசுது …இது ஜாவா பெருச்சாலிலே
எல்லாம் கூட்டு களவாணிகள்.