அரசியல் உதவியாளரான தியோ பெங் ஹாக் மரணம் தொடர்பில் அரச விசாரணை ஆணையம் சம்பந்தப்படுத்தியுள்ள தனிநபர்கள் மீது விசாரணையைத் தொடங்குவதைக் கட்டாயப்படுத்தும் பொருட்டு தியோ பெங் ஹாக் குடும்பத்தினர் இன்று போலீசில் புகார் செய்திருக்கின்றனர்.
மக்களவையில் சட்டத் துறைக்குப் பொறுப்பான அமச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் மக்களவையில் திங்கட்கிழமை விடுத்த அறிக்கையைத் தொடர்ந்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதாக தியோ குடும்பத்தின் வழக்குரைஞரான கோபிந்த் சிங் டியோ கூறினார்.
அரச விசாரணை ஆணையம் சம்பந்தப்படுத்தியுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் மூன்று அதிகாரிகள் மீது போலீஸ் புகார் எதுவும் செய்யப்படவில்லை என்பதால் அவர்கள் மீது கிரிமினல் புலனாய்வுகள் எதுவும் தொடங்கப்படவில்லை என நஸ்ரி குறிப்ப்ட்டிருந்தார்.