‘அது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. ஏனெனில் சபாவில் உள்ள சாதாரண மக்கள் கூட அந்த அடையாளக் கார்டுகள் பற்றியும் பிலிப்பினோக்கள் பற்றியும் கதை கதையாகச் சொல்வார்கள்’
அடையாளக் கார்டு திட்டம் பற்றி உருப்படியான ஆதாரம் இல்லை என்கிறார் முன்னாள் இசி தலைவர்
ஒரே எம்: “தாம் அந்த நேரத்தில் இசி செயலாளராக இருந்ததாகவும் இன்னொரு துறையில் தலையிட்டால் தமது பதவிக்கு ஆபத்து வந்திருக்கும் என்றும் அவர் (அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான்) கூறினார்.”
அந்த முழுப் பேட்டியிலும் அவர் உண்மையைச் சொல்லியிருப்பது அந்த ஒரே ஒரு இடத்தில் தான். அப்துல் ரஷிட்டை அம்னோ நியமித்தது. அடையாளக் கார்டு திட்டம் அம்னோ திட்டமாகும். இந்த நாட்டை விற்றதின் மூலம் அம்னோ மக்களுக்குத் துரோகம் செய்துள்ளது.
எல்லா இடங்களிலும் உருப்படியான ஆதாரங்கள் தென்படுகின்றன. அம்னோ அதிகாரத்தில் இருப்பதால் அது என்றென்றும் மறைக்கப்பட்டிருக்கும்.
மலேசியா அனைவருக்கும்: ஆதாரம் இல்லையா ? அந்த அடையாளக் கார்டு திட்டம் மீது சந்தேகம் கொண்டுள்ள அனைத்து மலேசியர்களுக்கு நான் சொல்லும் யோசனை இது தான். நமது பேரங்காடிகளுக்குச் செல்லுங்கள். மலேசிய அடையாளக் கார்டுகளுடன் அந்நியர்களைப் போன்று தோற்றமளிக்கும் எத்தனை பேர் அகண்ட அலை வரிசைச் சேவைகளுக்கு விண்ணப்பிக்கின்றனர் என அந்த அலைவரிசைகளை விளம்பரம் செய்கின்றவர்களைக் கேட்டுப் பாருங்கள்.
உங்களுக்கு அதிர்ச்சியளிக்கும் தகவல் கிடைக்கும்.
டூட்: மலேசியாவில் அம்னோ/பிஎன் -னுக்கு எதிரான பல ஊழல்கள் நிரூபிக்கப்பட முடியாமல் போய் விடுகின்றன
அதே வேளையில் பிஎன் அல்லாத மக்கள் தாங்கள் நிரபாரதிகள் என்பதை நிரூபிக்கத் தவறும் போது, சிறிய சூழ்நிலை ‘ஆதாரம்’ இருந்தால் கூட அவை மேலும் ஜோடிக்கப்பட்டு சில காலத்துக்கு உள்ளே தள்ளப்பட்டு விடுவர்.
பூ: ஆகவே அப்துல் ரஷிட் அவர்களே. உங்களுக்கு வலுவான ஆதாரம் வேண்டும் என நீங்கள் சொல்வதாக எனக்குத் தெரிகிறது. ஆனால் அந்த ஆதாரம் நம் மடியில் வந்து விழாது என்பது அனைவருக்கும் தெரியும் என நான் கருதுகிறேன்.
நீங்கள் உங்கள் நாற்காலியிலிருந்து எழுந்து உண்மையிலேயே வேலை செய்தால் ஒரு வேளை உங்களுக்கு ஆதாரம் கிடைக்கலாம். தாங்கள் வாங்கும் சம்பளத்துக்கு யாரும் இப்போது வேலை செய்வதில்லையே ?
அடையாளம் இல்லாதவன்_3da0: தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கெராக் காஸ் (Gerak Khas) அதனைக் கண்டு பிடிக்காது. உருப்படியான ஆதாரம் இல்லை ஆனால் புலனாய்வு நடத்தப்பட்டதா ? அதனை யார் மேற்கொண்டார்கள் ?
அது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. ஏனெனில் சபாவில் உள்ள சாதாரண மக்கள் கூட அந்த அடையாளக் கார்டுகள் பற்றியும் பிலிப்பினோக்கள் பற்றியும் கதை கதையாகச் சொல்வார்கள்.
அண்மையில் நான் சண்டாக்கானுக்குச் சென்றிருந்தேன். நான் பிலிப்பீன்ஸில் இருப்பதைப் போன்ற ஒர் உணர்வு எனக்கு ஏற்பட்டது.
சபாவில் வாழும் நாங்கள் முட்டாள்கள் அல்ல. நாங்கள் புதிதாக இந்தோனிசியாவிலிருந்து இறங்கிய இந்தோனிசியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளோம். சில மாதங்களில் அவர்கள் புதிதாக வழங்கப்பட்ட அடையாளக் கார்டுகளை காட்டுகின்றனர். தாங்கள் இப்போது ஒரே ஒரு நிபந்தனையுடன் மலேசியக் குடிமக்கள் என்றும் அவர்கள் பிரகடனம் செய்கின்றனர்- அவர்கள் பொதுத் தேர்தல்களில் பிஎன் -னுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே அதுவாகும்.
விபி பிடென்: ரஷிட்டைத் தவிர சபாவில் உள்ள அனைவருக்கும் அந்த அடையாளக் கார்டு திட்டம் பற்றி நன்கு தெரியும். அதில் இராணுவம், தேசியப் பதிவுத் துறை, உள்துறை அமைச்சு ஆகியவை சம்பந்தப்பட்டுள்ளன.
புதிதாக வந்து இறங்கும் குடியேற்றக்காரர்களை அந்தத் துரோகிகள் வரவேற்று புதிய அடையாளக் கார்டுகளை வழங்குகின்றனர். அந்தக் குடியேற்றக்காரர்கள் தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கின்றனர். எனக்கு இந்தத் தகவலைச் சொன்ன நண்பருடைய தந்தை சபாவில் உள்ள இராணுவத்தில் ஒரு ஜெனரல் ஆவார்.
தமது குடும்பத்துக்கு உணவளிக்க காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை செய்யும் என் நண்பரை நம்ப வேண்டுமா அல்லது பிஎன் துரோகிகளினால் நன்கு ஊட்டப்பட்ட ரஷிட் போன்றவர்களை நம்ப வேண்டுமா ?
டிகேசி: அப்துல் ரஷிட் ‘வரலாற்றைத் திருத்தி எழுதும்’ நோக்கத்துடன் மலேசியாகினிக்கு அந்தப் பேட்டியை வழங்கியிருக்க வேண்டும் என நான் நம்புகிறேன்.
முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் அப்துல் ரஹிம் நூர் ஆற்றிய உரையைப் போன்று அதிலும் டாக்டர் மகாதீர் முகமட்டின் அடிச்சுவடுகள் காணப்படுகின்றன.
உங்கள் அடிச்சுவட்டில்: அடையாளக் கார்டு திட்டத்தை யாரும் ஒப்புக் கொள்ளப் போவதில்லை. ஆனால் சபாவில் ஆயிரக்கணக்கான அந்நியர்கள் உங்களைப் பார்த்து முறைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.