முன்னாள் பிகேஆர் எம் பி கோபால கிருஷ்ணனை (பாடாங் சிராய்-சுயேச்சை உறுப்பினர்) மக்களவையில் குழப்பம் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அவையிலிருந்து வெளியில் செல்லுமாறு துணை சபாநாயகர் வான் ஜுனாய்டி வான் ஜுனாய்டி இன்று உத்தரவிட்டார்.
பிஎன் ரெம்பாவ் எம்பி கைரி ஜமாலுதினைக் கண்டிப்பதற்கு தாம் கொண்டு வந்த தீர்மானத்தை தமது அலுவலகத்தில் வான் ஜுனாய்டி நிராகரித்தற்கான விளக்கத்தை டிஏபி தலைவருமான டிஏபி புக்கிட் குளுகோர் எம்பி கர்பால் சிங் கேட்டுக் கொண்டிருந்த போது கோபால கிருஷ்ணன் குறுக்கிட்டதால் வாக்குவாதம் மூண்டது.
பினாங்கு முதலமைச்சரும் டிஏபி தலைமைச் செயலாளருமான லிம் குவான் எங்-கின் தவறான பாலியல் நடவடிக்கைகள் எனக் கூறப்படுவது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் மீது கைரி தமது டிவிட்டர் பக்கத்தில் கேலி செய்திருப்பது குறித்து மக்களவை விவாதிப்பதற்காக கர்பால் அந்தத் தீர்மானத்தை கொண்டு வந்தார்.
பினாங்கில் கம்போங் புவா பாலா கிராமம் உடைக்கப்பட்டது, கம்போங் புவா டாடா-வை ( Kampung Buah Dada) உருவாக்குவதற்காக இருக்கக் கூடும் என கைரி டிவிட்டரில் கேலி செய்திருந்தார்.