“கூட்டரசு நீதிமன்றத்தில் இனி என்ன நடந்தாலும், அது மாற்றப்பட்டாலும் கவலை இல்லை. காரணம் மாணவர்கள் என்ன செய்யலாம், செய்யக் கூடாது என்பது மீதான கருத்துக்கள் கூறப்பட்டு விட்டன.”
யூயூசிஏ சட்டத்தின் 15வது பிரிவு அரசியலமைப்புக்கு முரணானது என நீதிமன்றம் தீர்ப்பு
கிம் குவேக்: நீண்ட காலமாக தொடரும் பிஎன் ஆட்சியில் கடந்த 40 ஆண்டுகளாக அடக்குவதை நோக்கமாகக் கொண்ட நாகரீகமற்ற அது போன்ற சட்டங்களினால் நமது பல்கலைக்கழக மாணவர்கள் கட்டுப்படுத்தப்பட்டு வந்தனர்.
நீதியையும் நமது மாணவர்களுடைய ஜனநாயக உரிமைகளையும் மீண்டும் நிலைநிறுத்திய முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஹிஷாமுடின் யூனுஸுக்கும் லிண்டோன் அல்பர்ட்டுக்கும் என் பாராட்டுக்கள்.
ஹிஷாமுடினைப் பொறுத்த வரையில் அவர் நமது அரசியலமைப்பை நிலை நிறுத்தும் பல தீர்ப்புக்களை தொடர்ந்து வழங்கி வருகிறார். ஆகவே இந்தத் தீர்ப்பு அவருடைய மகுடத்தில் இன்னொரு அணிகலன் ஆகும். அரசியல் சார்பும் இரண்டாம் தரமும் காணப்படுகிற நீதித் துறையில் இது போன்ற தீர்ப்புக்கள் அரிதானவை.
ஒரே எம்: ‘பொது ஒழுங்கிற்குக் குந்தகத்தை ஏற்படுத்தாத வரையில் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாகத் தெரிவிக்கலாம் என்பதே அந்த முடிவின் அர்த்தமாகும்.
ஜோகூர் சுல்தான் இஸ்காண்டார் அந்தத் தீர்ப்பை வாசித்திருப்பார் என்று நான் நம்புகிறேன். மாணவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க கூட்டம் நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை.
அம்னோவை மாணவர்கள் பின்பற்ற வேண்டிய அவசியமே இல்லை. இது சுதந்திர நாடு தானே?
பால் வாரென்: மாற்றுக் கருத்துக்களைத் துணிச்சலாகத் தெரிவித்த அந்த இரு நீதிபதிகளுக்கும் என் வாழ்த்துக்கள். அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிரான கருத்தை சொல்லக் கூடாது என்ற நிலையை பலர் பின்பற்றும் வேளையில் ?
ஸ்வென்: பல விஷயங்களில் அதுவும் இந்த நாட்டில் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அம்சங்கள் மீது நீதி எப்போதும் தடுக்கப்பட்டு வந்துள்ளது. அந்த சூழ்நிலையில் இந்தத் தீர்ப்பு சுரங்கப் பாதையின் விளிம்பில் வெளிச்சத்தக் காட்டியுள்ளது.
முறையீட்டு நீதிமன்றம் குறிப்பாக இரண்டு நீதிபதிகள் அரசியலமைப்பை அதன் உணர்வின் அடிப்படையில் நிலை நிறுத்தியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கட்சி சார்பு இல்லாத இது போன்ற நீதிபதிகள் நமக்கு நிறையத் தேவை.
கேஎஸ்என்: நீதிபதி ஹிஷாமுடின் அங்கு இருந்ததால்தான் அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் நியாயமான சிந்தனையைக் கொண்டவர். ஆனால் சட்டத்துறைத் தலைவர் கூட்டரசு நீதிமன்றத்துக்கு முறையீடு செய்வதற்காகக் காத்திருங்கள்.
அந்த நீதிமன்றம் உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளும். ஹிஷாமுடின் தலைமை நீதிபதியாக இருக்க வேண்டும். ஆனால் அது நடக்காது. ஏனெனில் அவர் அம்னோ சேவகர் அல்ல.
கூட்டரசு நீதிமன்றத்தில் இனி என்ன நடந்தாலும், அது மாற்றப்பட்டாலும் கவலை இல்லை. காரணம் மாணவர்கள் என்ன செய்யலாம், செய்யக் கூடாது என்பது மீதான கருத்துக்கள் கூறப்பட்டு விட்டன.
நீதித்துறை வழங்கும் அரிதான தீர்ப்புக்களில் இதுவும் ஒன்றாகும். நீதிபதி ஹிஷாமுடினுக்கு நன்றி.
எல்லா மாணவர்களும் இதனைக் கருத்தில் கொண்டு கூட்டரசு நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை மாற்றுவதற்கு முன்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜய்47: சிந்தனையாளர்களும் சீர்திருத்தவாதிகளும் வளருவதை யூயூசிஏ சட்டத்தின் 15வது பிரிவு கட்டுப்படுத்துவதாக நீதிபதி ஹிஷாமுடின் தமது தீர்ப்பில் தெளிவாகக் கூறியிருக்கிறார்.
மாணவர்கள் தாங்கள் விரும்பும் அரசியல் பாதையைத் தேர்வு செய்வது எப்படி பொது ஒழுங்கிற்கு மருட்டலாக இருக்கும் என்பதை தம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் அவர் சொல்லியிருக்கிறார். ஆகவே அரசாங்கம் எந்தக் காரணத்துக்காக முறையீடு செய்யப் போகிறது?