நிறுவன வரிகளை உயர்த்துவது வர்த்தக போட்டிகளை பாதிக்கும் என்பதால் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி என்ற பொருள், சேவை வரியை அமலாக்குவதைத் தவிர அரசாங்கத்துக்கு வேறு வழி இல்லை.
உண்மையில் ஜிஎஸ்டி-யை அமலாக்கும் போது அரசாங்கம் நிறுவன வரிகளைக் குறைக்க முடியும் என பிரதமர் துறை அமைச்சர் இட்ரிஸ் ஜாலா கூறியிருக்கிறார்.
ஆனால் அந்த வரியை அறிமுகம் செய்வது அரசாங்கத்திற்கு பெரும் சுமையாக இருக்கிறது. ஆகவே அதற்கு எதிர்க்கட்சிகளின் உதவி தேவை என அவர் சொன்னார்.
“அரசாங்கம் அதனை அமலாக்க விரும்பும் ஒவ்வொரு முறையும் எதிர்க்கட்சிகள் மக்களுக்கு வாழ்க்கையை மேலும் சிரமமாக்கி விடும் என்று கூறுகின்றன. அதனால் வாக்குகளை இழக்கும் அபாயம் ஏற்படுகிறது.”
“எதிர்க்கட்சிகள் எங்களுடன் இணைந்து அதனை செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன். அத்துடன் அதனைச் செய்வதும் அவசியமாகும்.”
இட்ரிஸ் இன்று கோலாலம்பூரில் உள்ள புக்கிட் கியாராவில் பொருளாதார உருமாற்றத் திட்டத்தின் முதலாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களில் பேசினார்.