மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில், தமது குடும்ப உறுப்பினர்கள் நிர்வாகம் செய்யும் விலங்குக் கூடத் திட்டத்தை சூழ்ந்துள்ள சர்ச்சையை விளக்க வேண்டும் என பிகேஆர் ஒன்று வலியுறுத்தியது.
விவசாய, விவசாய அடிப்படைத் தொழில் அமைச்சு செய்த மதிப்பீடுகளைக் காட்டிலும் 22 மடங்கு கூடுதலாக அந்தத் திட்டத்துக்குச் செலவு செய்யப்பட்டுள்ளதாக அந்த எதிர்க்கட்சி கூறியது.
அந்தப் பண்ணையிலிருந்து பெறப்பட்ட இறைச்சி, அவரது குடும்பத்துக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் ஒர் ஆடம்பர உணவு விடுதிக்கு விற்கப்படுவதாக சொல்லப்படுவதையும் ஷாரிஸாட் விளக்க வேண்டும் என பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் வலியுறுத்தினார்.
என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிர்வாகக் கழகத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அந்தத் திட்டம் உள்நாட்டு மாட்டிறைச்சி தேவையில் 40 விழுக்காட்டைப் பூர்த்தி செய்யும் நோக்கத்திலும் தோல்வி கண்டு விட்டதாக இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடத்திய நிருபர்கள் சந்திப்பில் ராபிஸி கூறினார்.