நஸ்ரி: தூதர் விவகாரத்தில் தவறு செய்து விட்டேன்

admitமலேசியாவுக்கான  சீனத்  தூதர்  ஹுவான்  ஹூய்காங் பெட்டாலிங்  ஸ்திரீட்டில்  தெரிவித்த  கருத்துகளுக்காக விஸ்மா  புத்ராவுக்கு  அழைக்கப்பட்ட  விவகாரத்தில்  தாம்  கருத்துரைத்தது  தவறுதான்  என்பதைச்  சுற்றுலா,  பண்பாட்டு  அமைச்சர்  முகம்மட்  நஸ்ரி  அப்துல்  அசீஸ்  ஒப்புக்கொண்டார்.

என்றாலும், வெளியுறவு  அமைச்சின்  விவகாரங்களில்  தலையிடும்  நோக்கில்  அவ்வாறு   செய்யவில்லை  என்பதையும்  அவர்  வலியுறுத்தினார்.

“தலையிடும்  எண்ணம் இல்லவே  இல்லை”, என மலேசியாகினிக்கு  அனுப்பிய  குறுஞ் செய்தியில்  நஸ்ரி  குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சர்கள்  சிலர்  தம்முடன்  ஆலோசனை  கலக்காமலேயே  தூதர்  விவகாரத்தில் தலையிட்டிருப்பதாக வெளியுறவு  அமைச்சர்  அனிபா  அமான்  வருத்தப்பட்டிருப்பது  குறித்து  வினவியதற்கு  நஸ்ரி  இவ்வாறு  கூறினார்.