பிடிஎன்: இனவாத பேரணி நடத்தியவர்களைத் தண்டிப்பீர்

btnஇனங்களுக்கிடையில்  பதற்றம்  ஏற்படுத்தக்  கூடிய  அரசியல்  நடவடிக்கைகளில்  ஈடுபடும்  என்ஜிஓ- களுக்கு  எதிராக  அரசாங்கம்  நடவடிக்கை  எடுப்பதைத்  தேசிய  குடிமையியல்   பிரிவு(பிடிஎன்)  முழுமையாக  ஆதரிக்கிறது.

நாட்டில்  அராஜகத்தைத்  தடுக்க  அவ்வாறு  செய்வது  அவசியம்  என  பிடிஎன்  தலைவர்  ராஜா  அரிப்  ராஜா  அலி  கூறினார்.

“நாட்டில்  சட்டங்கள்  இருக்கின்றன. யாராக இருந்தாலும்  தவறு  என்றால் தவறுதான்.

“நீதிமன்றம்  குற்றம்  என்று  கூறும்போது  நாம்  அதைக்  குற்றமில்லை  என்று  கூறுகின்ற  நிலை  இருக்கலாமா. அது  சிகப்புச்  சட்டையோ மஞ்சள்  சட்டையோ  வெள்ளை  சட்டையோ  யாராக  இருந்தாலும்  சரிதான்”, என  கோலாலும்பூரில்   நாட்டுப்பற்று  மீதான  மாநாட்டில்  கலந்துகொண்ட  பின்னர்  செய்தியாளர்களிடம்  பேசியபோது  ராஜா  அரிப்   கூறினார்.

நாடாளுமன்றத்தில்  இளைஞர், விளையாட்டுத்துறை  அமைச்சர்  கைரி  ஜமாலுடின்  வியாழக்கிழமை  எர்  டெக்  ஹுவா(டிஏபி- பாரிட்)-வின்  கேள்விக்கு  அளித்த  எழுத்துப்பூர்வமான  பதிலுக்கு  எதிர்வினையாக  ராஜா  அரிப்  இவ்வாறு  கூறினார்.

கைரி,  தம்முடைய  பதிலில்,  தேசிய  சீலாட்  சங்கம் (பெசாகா)  அரசியல்-  நோக்கம்  கொண்ட  நடவடிக்கைகளில்  ஈடுபட்டதாக  தெரிந்தால்  சட்டப்படி  அதற்கு  எதிராக  நடவடிக்கை  எடுத்து  அதை  இடைநீக்கம்  செய்ய  முடியும்,  அதற்கு  அபராதம்  விதிக்க  முடியும்  என்று  கூறியிருந்தார்.