நஜீப், ரோஸ்மாவை தரக்குறைவாகப் பேசியவருக்கு சிறை!

ஹரிராயா பொது உபசரிப்பின்போது திடீரென மேடை ஏறிய ஆடவர், பிரதமர் நஜீப் துன் ரசாக், அவரின் மனைவி உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஆகியோரை தரக்குறைவாகப் பேசினார். அந்த ஆடவருக்கு 7 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை சிரம்பான் 2 மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை எஸ். ராஜசேகர் (வயது 39) ஒப்புக்கொண்டார்.

முதல் குற்றத்திற்கு ஆறு மாதமும் இரண்டாவது குற்றத்திற்கு ஒரு மாதமும் சிறை தண்டனை வழங்குவதாக நீதிபதி கூறினார்.

செப்டம்பர் 16-ம் தேதி சிரம்பான் ஜலான் யம் துவான் திடலில் நடைபெற்ற ஹரிராயா சத்து மலேசியா பொது உபசரிப்பின்போது மேடை ஏறி ஒலி பெருக்கியில் பிரதமர் அவரின் துணைவியார், உள்துறை அமைச்சர் ஆகியோரை தரக்குறைவாக பேசியபோது அவர் கைது செய்யப்பட்டார். அந்த நபர் போர்டிக்சன் லுக்கூட்டைச் சேர்ந்தவராவார்.

-மலேசிய நண்பன் (02.11.2011)