அரசாங்க வீட்டுவசதிக் கடன்களுக்கு விண்ணப்பிக்கும் அரசாங்க ஊழியர்கள் பூமிபுத்ரா பங்காளிகளைக் கொண்ட வழக்குரைஞர் நிறுவனங்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனை எதுவும் கிடையாது என நிதி துணை அமைச்சர் சுவா டீ யோங் கூறினார்.
இதன் தொடர்பில் பொதுத் துறை வீடமைப்பு நிதி நிறுவனத்திடம் விளக்கம் கேட்டதாகவும் அது அரசாங்கக் கொள்கையில் அப்படிப்பட்ட நிபந்தனை இல்லை என்று உத்தரவாதம் அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அப்படி ஒரு நிபந்தனை இருப்பதாகவும் அது வழக்குரைஞர் தொழிலில் இனவாதத்தை ஊக்குவிக்கிறது என்றும் மசீச இளைஞர் சட்ட விவகாரப் பிரிவுத் தலைவர் இங் கியான் கூறியிருந்தார்.
நீங்க இப்படி சொல்லீறீங்க. உள்ளுக்குள்ளே என்ன நடக்குதுன்னு உங்களுக்குத் தெரியுமா?
இதுவரையில் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பூமி புத்ரா அல்லாத வழக்குரைஞர் நிறுவனம் ஏதும் உண்டா?? அப்படி இருப்பினில், இவ்விவகாரத்தை எதிர்த்திருக்கலாமே?? அல்லது வழக்குரைஞர் மன்றத்திடம் புகார் செய்திருக்கலாமே??
இதுவரையில் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பூமி புத்ரா அல்லாத வழக்குரைஞர் நிறுவனம் ஏதும் உண்டா?? அப்படி இருப்பினில், இவ்விவகாரத்தை எதிர்த்திருக்கலாம்!!!அல்லது வழக்குரைஞர் மன்றத்திடம் புகார் செய்திருக்கலாமே??