கேஎல் அனைத்துலக விமான நிலையத்தில் கைவிடப்பட்டுக் கிடந்த மூன்று போயிங் விமானங்களின் உரிமையாளர்களுடன் தொடர்பு இல்லாமல் போனது. அதனால்தான் மலேசியன் ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட்(எம்ஏஎச்பி) அவை பற்றி விளம்பரம் செய்தது.
விமானங்களின் உரிமையாளர்களைக் கண்டுபிடிப்பது அந்த விளம்பரத்தின் நோக்கம் என்று விளக்கிய போக்குவரத்து துணை அமைச்சர் அப்துல் அசீஸ் கப்ராவி, அவ்விமானங்கள் விமான நிலையத்தில் இடத்தை அடைத்துக் கொண்டிருந்ததால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டிய அவசியமும் இருந்ததாகக் குறிப்பிட்டார்.
“2010-இலிருந்து அம்மூன்று விமானங்களும் கைவிடப்பட்டுக் கிடக்கின்றன. முதலில் அவை ஏர் அட்லாண்டா ஐஸ்லாண்டிக் நிறுவனத்துக்குச் சொந்தமானவையாக இருந்தன. பீன்னர் வேறு ஒரு நிறுவனத்துக்கு விற்கப்பட்டன. 2013 செப்டம்பர் மாதத்திலிருந்து எம்ஏஎச்பி-க்கும் புதிய உரிமையாளர்களுக்கும் தொடர்பு இல்லை. புதிய உரிமையாளர் ஒரு செயல்படும் நிறுவனமாகவும் தெரியவில்லை.
“அதனால்தான் எம்ஏஎச்பி விளம்பரத்தை நாட வேண்டியதாயிற்று.. அடுத்த இரு வாரங்களில் யாரும் உரிமை கொண்டாடவில்லை என்றால் எம்ஏஎச்பி விமானங்களை விற்கலாம். அந்த உரிமை அதற்கு உண்டு”, என அசீஸ் செனட்டில் கூறினார்.
அதுலே IS வந்து இறங்கியதாக ஒரு செய்தி வருகிறதே நீங்க மக்களை எஅமற்றுவீர்கல் நாங்கள் அப்படியே நம்பிட்டோம்