மலேசியா ‘பழி தீர்க்கும்’ பாதையில் செல்கிறது

“விழிப்புக் குழுக்கள் அமைக்கப்படும். நீதிக்கு புறம்பாக தண்டனைகள் வழங்கப்படும். மக்கள் அதனை உணருவதற்கு முன்னர் சர்வாதிகாரம் அவர்கள் வீட்டுக் கதவு அருகில் வந்து விடும்”

போலீஸ் மெர்தேகா செக்சுவாலட்டி விழாவைத் தடை செய்கிறது. 

பெர்ட் தான் :  எல்லாமே தெரிந்த விஷயம் தான். போலீஸ் மூலம் அரசாங்கம் அச்சத்தை உருவாக்குகிறது.

மனித உரிமைகளைக் கட்டுப்படுத்துமாறு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டும் முன்னாள் போலீஸ் தலைவர் அப்துல் ரஹிம் நூரும் கேட்டுக் கொள்கின்றனர். அவர்களிடமிருந்து போலீஸ் ‘உத்தரவுகளை’ பெறுகிறது.

மக்களிடையே பாதுகாப்பற்ற உணர்வைத் தோற்றுவிப்பதற்காக ஒன்றுமில்லாத விஷயத்தின் மூலம் அச்ச உணர்வு ஊட்டப்படும். அடுத்து மக்கள் அரசாங்கத்திடமிருந்து ‘பாதுகாப்பு’ கோருவர்.

பின்னர் அரசாங்கம் கருணை உள்ளத்தோடு மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குக் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்-அதாவது ஒரு நிபந்தனையுடன் – மனித உரிமைகள் பின்னுக்குத் தள்ளப்பட வேண்டும்.

அதனைத் தொடர்ந்து விழிப்பு நிலைக் குழுக்கள் அமைக்கப்படும். நீதிக்கு புறம்பாக தண்டனைகள் வழங்கப்படும். மக்கள் அதனை உணருவதற்கு முன்னர் சர்வாதிகாரம் அவர்கள் வீட்டுக் கதவு அருகில் வந்து விடும்.

2006ம் ஆண்டு வெளிவந்த ‘V for Vendetta’ என்னும் திரைப்படத்தையே நான் வருணித்துக் கொண்டிருக்கிறேன். நம் நாட்டில் அரங்கேறும் காட்சிகளுக்கும் அதற்கும் ஒற்றுமை இருப்பதைக் காண முடியும்.

அர்கோனிஸ்ட்: இப்போது தான் போலீசாருக்கு அந்த விழா, மருட்டல் எனத் தெரிந்துள்ளது. கடந்த காலத்தில் அது மருட்டல் அல்ல. உண்மையில் அரசாங்கக் கட்சிகளும் அவர்களுடைய கூஜாக்களுமே நாட்டுக்கு மருட்டல்.

அச்ச உணர்வை தோற்றுவிக்க அதிகாரத்தில் உள்ளவர்கள் எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கின்றனர். மக்களுக்கு உரிமைகளே இல்லை.

அண்மையில் ஒரு மில்லியன் முஸ்லிம்கள் ஒன்று கூடும் நிகழ்வு நடத்தப்பட்டது. அதனை ஏற்பாடு செய்தவர்கள் மலேசியாவில் அழிவுச் சக்திகளாகும். ஆனால் அது மிரட்டல் அல்ல. ஏனெனில் ஆளும் கட்சி அங்கீகரித்ததாகும்.

அத்தகைய நடவடிக்கைகளை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சிகளுடைய தலைவர்களும் உறுப்பினர்களும் வெட்கப்பட வேண்டும்.

அர்ட்சன்: பொது ஒழுங்குக்கு எங்கே மருட்டல் ஏற்பட்டது ? யார் யாரை மருட்டுகின்றார்கள் ?  மக்களைப்  பாதுகாத்து அவர்கள் பாதுகாப்பான சூழ்நிலையில் வாழ்வதை உறுதி செய்வது போலீஸின் கடமை இல்லையா ?

அஸிஸி கான்: ஆகவே குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டிய தங்களுடைய வேலைகளை செய்யாமல் இருப்பதற்கு இன்னொரு காரணத்தைப் போலீஸ் கண்டு பிடித்துள்ளது.

நாம் ஏன் போலீஸ் பணிகளை இன்னொரு அமைப்பிடம் ஒப்படைக்கக் கூடாது ? போலீஸ் தனது உண்மையான வேலையில் அக்கறை காட்டவில்லை என எனக்குத் தோன்றுகிறது.

அர்மகடோன்: துணை தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார் அவர்களே, செக்சுவாலட்டி மெர்தேகா உண்மையில் விடுக்கும் மருட்டல் என்ன ? அவர்கள் பொது இடங்களில் ஒருவரை ஒருவர் குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்திக் கொள்ளத் தொடங்குவர் என நீங்கள் எண்ணுகின்றீர்களா ? அந்த விழா நடந்தாலும் நடைபெறாவிட்டாலும் ஒரினச் சேர்க்கை இந்த நாட்டில் இருக்கத் தான் போகிறது.

புரோர்ட்: பாலியம் ரீதியில் ஒதுக்கப்பட்ட சிறுபான்மை மக்களுடைய உரிமைகளை அந்த செக்சுவாலட்டி மெர்தேகா விவாதிக்கப் போகின்றது. குதப்புணர்ச்சியின் சந்தோஷம் பற்றி அது பாடம் நடத்தப் போவதில்லை.

ஒரினச் சேர்க்கைக்கும் குதப்புணர்ச்சிக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை புரிந்து கொள்வது முக்கியமாகும். குதப்புணர்ச்சியில் ஈடுகின்றவர்கள் அனைவரும் ஒரின சேர்க்கையில் விருப்பம் உள்ளவர்கள் என்றோ எல்லா ஒரின சேர்க்கையில் நாட்டமுள்ள அனைவரும் குதப்புணர்ச்சியில் ஈடுபடுகின்றவர்கள் என்றோ கருதுவது நியாயமல்ல.

காலனித்துவ விக்டோரியா காலத்தில் இயற்றப்பட்ட நமது குற்றவியல் சட்டத்தின் கீழ் குதப்புணர்ச்சி சட்ட விரோதம் என பட்டியலிடப்பட்டுள்ளது. பழமைப் போக்குடைய இந்தியா கூட, காலத்துக்கு ஒவ்வாத அந்த ஒடுக்குமுறைச் சட்டத்தை ரத்துச் செய்து விட்டது.

அடையாளம் இல்லாதவன்_rb345: பினாங்கில் 200 மாட் ரெம்பிட்-கள் பொது ஒழுங்கிற்கு மருட்டல் இல்லையா ?

தேவ்: செக்சுவாலட்டி மெர்தேகா நிகழ்வது இது முதன் முறை அல்ல. இந்த ஆண்டு ஒரே ஒரு வேறுபாடு உள்ளது. அதனை பெர்சே தலைவர் எஸ் அம்பிகா தொடக்கி வைப்பதே அந்த வேறுபாடு ஆகும். அதனால் அதிகாரிகள் முழுமையான தடையை விதித்துள்ளனர்.

மை தோர்: உங்கள் வாழ்வு ஆதாரமும் பதவி உயர்வும் ஆளும் அம்னோவைச் சார்ந்திருக்கும் போது நீங்கள் என்ன செய்ய முடியும் ?  தங்கள் எஜமானர்களுக்கு அடிபணிவதைத் தவிர போலீசாருக்கு வேறு வழி இல்லை.