செக்சுவாலட்டி மெர்தேகா விழா நிகழ்வுகளைத் தடை செய்துள்ள போலீசை வழக்குரைஞர் மன்றம் சாடியுள்ளது. போலீஸ் படை தவறான தரப்புக்கள் மீது குறி வைப்பதாகவும் அது குற்றம் சாட்டியது.
அந்த விழாவைத் தடை செய்வதற்கு போலீஸ் கொடுத்துள்ள காரணம் பொது ஒழுங்கு என்பதாகும். அந்த விழா நிகழ்வுகளைச் சீர்குலைக்க மக்கள் முயலுவர் என்பதே அதன் பொருள் ஆகும் என அதன் துணைத் தலைவர் கிறிஸ்டபர் லியோங் கூறினார்.
ஆகவே இந்த விவகாரத்தில் ஒழுங்கை சீர்குலைக்கப் போவதாக மருட்டும் தரப்புக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் சொன்னார்.
“நாம் கலவரத்தை மூட்டுவதற்கு கட்டுக்கு அடங்காத கும்பல்களை நாம் அனுமதிக்கக் கூடாது. அமைதியான நடவடிக்கைகளைத் தடை செய்வதின் மூலம் அத்தகைய கும்பல்களுக்கு போலீஸ் தன்னை அறியாமல் ஆதரவு அளிக்கக் கூடாது.”
“அது நிகழுமானால் நமது நாட்டுக்கும் ஜனநாயகத்துக்கும் அது சோகமான நாள் ஆகும்,” என லியோங் நேற்று விடுத்த ஊடக அறிக்கை குறிப்பிட்டது.
போலீஸ் அதற்குப் பதில் அமைதியாக கூடும் மக்களுடைய உரிமைகளைப் பாதுகாக்க தங்கள் வளங்களைப் பயன்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்ட லியோங், செக்சுவால்ட்டி மெர்தேகா அமைதியாகவும் தலையீடு ஏதுமின்றியும் நிகழ்வதை உறுதி செய்யவும் வேண்டும் என்றார் .