மனித உரிமை மீறல் உள்ளிட்ட பிரச்னைகளை இலங்கையின் உள்விவகாரங்களாக மலேசியா கருதுவதால் அந்த விவகாரங்களில் மலேசிய அரசாங்கம் தலையிடாது. அப்பிரச்னையை இலங்கையே தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று வெளியுறவுத் துறைத் துணை அமைச்சர் கோகிலன் பிள்ளை தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கோகிலன் இவ்வாறு குறிப்பிட்டார்.
அதேவேளை, பொருளாதாரம், முதலீடு, மனித மூலதனம் உள்ளிட்ட விடயங்களில் இலங்கையுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேண மலேசியா உத்தேசித்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேபோன்று சீனா- திபத் குறித்த விவகாரங்களிலும் மலேசியா தலையிடப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
“சீனா நமது உள்விவகாரங்களில் தலையிமுடியாது. அதேபோல் மலேசிய அரசாங்கமும் சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடமுடியாது” என்றார் அவர்.