இன்று சுங்கை புசார் மக்களிடம் பேசிய சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலி, அவர்களின் தொல்லைகளுக்குக் காரணமான “மனிதர்” விரைவில் அவர்களிடம் உதவிகேட்டு விரைவில் வருவார் என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்தினார்.
“இன்னும் இரண்டு வாரங்களில் பலர் சுங்கை புசாருக்கு வந்து அங்கேயே ‘குடியிருப்பார்கள்’. ஜிஎஸ்டி( பொருள், சேவை வரி)-யை அமல்படுத்தியவர்கூட உங்களிடம் உதவிகேட்டு வருவார்.
“ஜிஎஸ்டி-யைக் கொண்டு வந்தவருக்கு உதவாதீர்கள். மக்களின் துன்பங்களுக்கு அதுதான் காரணம்”, என்று அஸ்மின் கூறினார்.
எதிர் கட்சிகள் ஒன்றுபடாவிட்டால் மீண்டும் மண்ணை கவ்வுவது நிச்சயம்.